Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தின்போது ஜலஜோஷம் அல்லது இருமலை சமாளிப்பது எப்படி?

கர்ப்பத்தின்போது ஜலஜோஷம் அல்லது இருமலை சமாளிப்பது எப்படி?

35

ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைகிறது, இதனால் கர்ப்பத்தின்போது சில சமயம் ஜலதோஷம் அல்லது இருமல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருப்பதால், இந்தப் பிரச்சனைகள் விரைவில் குணமாகாமல் பல நாட்கள் தொடரலாம். ஆகவே, ஜலதோஷமோ இருமலோ வராமல் பார்த்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை வந்துவிட்டால், அவற்றைச் சமாளிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், கூடிய விரைவில் சிகிச்சையளிக்க வேண்டும்.

எப்படி ஜலதோஷம் பிடிக்காமல் தவிர்ப்பது?
ஜலதோஷம் மிக விரைவாகப் பரவக்கூடியது என்பதால், அதைத் தவிர்ப்பது மிகக் கடினம். யாருக்காவது ஜலதோஷம் இருந்தால், அவரிடமிருந்து உங்களுக்கு அது பரவலாம், அல்லது ஜலதோஷம் உள்ளவர்களின் உடலிலிருந்து வெளியேறும் பொருள்களால் (சளி போன்றவை) மாசுபட்ட பொருள்களைத் தொட்டால் அதனாலும் பரவலாம். ஜலதோஷம் வராமல் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஜலதோஷம் பிடித்த நபர்களிடம் இருந்து விலகி இருக்கவும்
ஜலதோஷம் பிடித்தவருக்கு அருகில் நீங்கள் இருக்க நேர்ந்தால் அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவவும்.
ஜலதோஷம் பிடித்தவர் தும்மும்போதும் இருமும்போதும், டிஷு ஒன்றைப் பயன்படுத்தி மூடியபடி இருக்குமாறு கேட்டுக்கொள்ளவும், அப்படிப் பயன்படுத்திய அந்த டிஷுவை உடனடியாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு கைகளை நன்கு கழுவுமாறு கூறவும்.
வீட்டில் உள்ள மேற்பரப்புகளை, குறிப்பாக கதவின் கைப்பிடிகள், குழாய்கள், தொலைபேசி போன்றவற்றை நன்கு சுத்தம் செய்யவும்.
பாத்திரங்கள், கப், தட்டுகள் அலல்து டம்ளர்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
டவலையும் ஒருபோதும் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம், உங்கள் டவலை அடிக்கடித் துவைக்கவும்.
ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ளவும், போதிய அளவு தூங்கவும்,தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
பிரசவத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் மருந்துகள், புரோபயாட்டிக் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
கர்ப்பத்தின்போது ஜலஜோஷம் அல்லது இருமலை சமாளிப்பது எப்படி
கர்ப்பத்தின்போது ஜலஜோஷம் அல்லது இருமல் இருந்தால் அதைச் சமாளிக்கவும் சிகிச்சையளிக்கவும் பின்வரும் குறிப்புகள் உதவும்:
போதுமான ஓய்வெடுக்கவும்: 7-8 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம். அத்துடன் நல்ல ஒய்வு எடுக்க வேண்டும், யை இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்க உதவும், அத்துடன் அறிகுறிகளைத் தணிக்கவும் உதவும்.
உடலில் போதிய அளவு நீர் இருக்க வேண்டும்: உடலில் நீர்ச்சத்து குறையும்போது உடனடியாக மீண்டும் நீர்ச்சத்து கிடைக்க வேண்டியது மிக முக்கியம், ஆகவே அவ்வப்போது அதிக நீர் அருந்தவும், பழச்சாறு அல்லது சூப் போன்றவற்றையும் அருந்தலாம்.
நன்றாக சாப்பிடுங்கள்: ஊட்டச்சத்துள்ள உணவு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும், விரைவில் குணமடையவும் உதவும்.ஆகவே, அடிக்கடி சிறு சிறு அளவில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளவும்.

மூக்கடைப்பைச் சமாளித்தல்: ஜலதோஷத்தால் மூக்கடைப்பு ஏற்பட்டால் அது பெரும் சிரமமாக இருக்கலாம்.ஒரு நாளுக்கு 2-3 முறை ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகலாம். மூக்கிற்குள் தெளிக்கும் உப்பு நீர் ஸ்ப்ரே அல்லது வேபோரப் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
இருமலைச் சமாளித்தல்: தொண்டைப் புண் அல்லது இருமலுக்கு நிவாரணம் அளிக்க, ஒரு நாளுக்கு 2-3 முறை உப்பு நீரில் வாய் கொப்புளிக்கலாம்.வெதுவெதுப்பான நீர் அல்லது தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த நீரை ஒவ்வொரு மிடக்காக அருந்துவதும் நிவாரணமளிக்கும்.
மருந்துகள்: கர்ப்ப காலத்தில் மருந்துகளை உட்கொள்வது வளரும் கருவிப் பாதிக்கலாம் என்பதால், கூடியவரை மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது.எப்போதும், ஜலதோஷம் அல்லது இருமலுக்காக, மருந்து கடைகளில் வாங்கி மருந்துகளைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவற்றுக்கு பாராசெட்டமால், தொண்டைப் புண் குறைய மிட்டாய் மாத்திரைகள் மற்றும் இருமலைக் குறைக்க சிரப் போன்றவற்றைப் பரிந்துரைக்கலாம.
கர்ப்பத்தின்போது ஜலதோஷம் அல்லது இருமல் வந்தால், அது குழந்தையைப் பாதிக்குமா?
நல்ல செய்தி என்னவென்றால், ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அவருக்கு ஜலதோஷமோ இருமலோ வந்தால், குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமின்றி, கர்ப்பத்தின்போது ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவது என்பது சகஜமானதே. இருந்தாலும், கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு ஜலதோஷமோ இருமலோ வந்தால் பெரும் சிரமமாக இருக்கும், இதை சிகிச்சையளித்து சரி செய்யலாம். அதன் பிறகு பாதிப்புகள் எதுவும் இருக்காது.
எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்
பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும்:
அறிகுறிகள் உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்தால்..
அறிகுறிகள் கடுமையானால் அல்லது ஓரிரு நாட்களில் குறையாவிட்டால்..
102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான காய்ச்சல் இருந்தால்..
இருமும்போது, நிறமாறிய சளி வந்தால் அல்லது இருமலுடன் நெஞ்சில் வலி அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால்..