Home பெண்கள் அழகு குறிப்பு கண்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்

கண்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்

31

மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்கள். மனிதனின் கண் புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது.

கண்ணில் ஒரு திறப்பு உள்ளது. அதற்கு கண்மணி என்று பெயர். ஒளியை பெற்று கொள்வதற்கு தகுந்தபடி சுருங்கி, விரிவடையும் திறன் கண்மணிக்கு உண்டு. ஆதலால் இதனை ஒரு பூதக்கண்ணாடி என்றே சொல்லலாம். அது ஒளி அலைகளை குவித்து வந்து சேரும் படி செய்கிறது. ஒளி அலைகளின் சேர்க்கை காரணமாக உருவம் அமைகிறது. கண் விழியின் பின்புறம் உள்ள திரையில் உருவம் பதிவாகிறது. இந்த திரை உருவங்களை தெளிவாக காட்டக்கூடிய உணர்வை பெற்றுள்ளது.

மனிதனின் ஒவ்வொரு கண்ணிலும் ஒளியை எளிதில் கவரக்கூடிய எண்ணற்ற கண் அறைகள் உள்ளன. இந்த கண் அறைகளில் ஒன்றின் மீது ஒளிபடும் போது கண் அறைக்குள் நொடிப்பொழுதில் வேதியியல் மாறுதல் ஏற்படுகிறது. இந்த மாறுதல் நரம்பு நாரில் உணர்ச்சி அலையை உண்டு பண்ணுகிறது. உணர்ச்சி அலை என்னும் செய்தி கண்ணொளி சம்பந்தமான நரம்புகள் வழியாக மூளைக்கு போய் சேருகிறது. செய்தியை மூளை புரிந்து கொள்கிறது. அதன் விளைவாகவே பார்வை ஏற்படுகிறது.

கண்ணின் வடிவம் ஒரு பந்தை போன்றது. அதன் முன்புறத்தில் ஒரு சிறிய புடைப்பு உள்ளது. இந்த புடைப்பின் மையத்தில் கண்மணி உள்ளது. அது கருமையான தோற்றம் உடையது. கண்ணின் இருண்ட உட்பகுதியில் அது திறப்பதால் கருமை நிறம் பெற்றுள்ளது. கண்மணியை ஒளி ஊடுருவிச் சென்று பூதக்கண்ணாடியை போன்ற அமைப்பை அடைகிறது. பூதக்கண்ணாடி அமைப்பின் குவி முகப்பில் ஒளி அலைகள் வந்து சேர்ந்ததும், கண் உருண்டையின் பின்புறத்தில் உருவம் அமைகிறது. கண்ணின் பின்புறத்தில் ஒளியை எளிதில் கவரக்கூடிய உணர்வு மிக்க ஒரு மென்திரை உள்ளது.

கண்மணியை சுற்றிலும் ஒரு வகை சவ்வு உள்ளது. இது நீலம், பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம். கேமராவின் துவாரத்தை போல, அது தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளும். ஒளி அதிகமாக இருக்கும் போது சிறிய தசை நார்கள் சவ்வை விரிவடைய செய்கிறது. அதன் விளைவாக கண்மணியின் துவாரம் சிறிதாகிறது. எனவே குறைந்த அளவில் ஒளி கண்ணுக்குள் புக முடிகிறது.

ஒளி மிகவும் குறைவாக இருக்கும் போது கண்மணியின் துவாரம் பெரிதாகிறது. அதன் பயனாக அதிக அளவில் ஒளி கண்ணுக்குள் புக முடிகிறது.

கண்விழியைச் சுற்றிலும் மென்மையும் வலுவும் வாய்ந்த சவ்வு அமைந்துள்ளது. கண்ணின் வெண்ணிறங்கள் இந்த சவ்வின் பகுதிகள் ஆகும். இதில் தான் கண் விழி முன்புறத்தில் புடைத்திருக்கிறது. புடைத்துள்ள பகுதிக்கு ரெட்டினா என்று பெயர். அதாவது கருவிழியின் மேல் தோல், விழியின் பின்புற திரைக்கும், விழியின் மேல் தோலுக்கும் இடையே உப்பு சத்துள்ள தெளிவான திரவம் நிறைந்து இருக்கிறது. இதை திரவப்பூதக்கண்ணாடி என்றும் சொல்லலாம்.

கண்ணின் மற்றொரு பூதக்கண்ணாடி கண்மணிக்கு பின்புறத்தில் உள்ளது. நாம் அருகில் உள்ள பொருட்களை பார்க்கும் போது இந்த பூதக்கண்ணாடி கெட்டியாகிறது. தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்கும் போது இந்த பூதக்கண்ணாடி மென்மையாகிறது.

நமது கண்கள் பார்க்கவில்லை. உண்மையில் மூளை தான் பார்க்கிறது. உருவம் மூளைக்கு வந்ததும், அது கண்களில் உள்ள அறைகளின் உருவத்திற்கு விளக்கத்தை கொடுக்கிறது. இவ்வாறு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு கண்களின் மூலமாக நாம் உருவங்களை காண்கிறோம்.