Home ஜல்சா கள்ளக் காதல் தொடர்பால் கணவனை விஷம் ஒடுத்து தீர்த்துக் கட்டிய மனைவி

கள்ளக் காதல் தொடர்பால் கணவனை விஷம் ஒடுத்து தீர்த்துக் கட்டிய மனைவி

40

கணவரை கொன்று உடலை எரிக்க முயற்சித்த பெண் , போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அடுத்த முதோல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் விவேக் மெஹர்வாத். இவரது மனைவி ஷில்பா(30). விவேக்கின் தொழிலை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷில்பாவிற்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதை அறிந்த விவேக்கின் தாய், அனைத்து பொறுப்புகளை திரும்ப ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து ஷில்பாவும், அவரது தோழி குமாரியும் சேர்ந்து திட்டமிட்டு, விவேக்கிற்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் உடலை எரிப்பதற்காக மினி லாரி மூலம் இடுகாட்டிற்கு சென்றனர். அவர்கள், அங்கிருந்த வாட்ச் மேனுக்கு ரூ.2000 பணம் கொடுத்துள்ளனர்.

ஆனால் உறவினர்கள் யாரும் வராததால் சந்தேகமடைந்த வாட்ச் மேன், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, விவேக் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்ததாக கூறினார்.

மேலும், மினி லாரி டிரைவர் மற்றும் வாட்ச் மேனின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் ஜாமின் வழங்க மறுத்தனர். இதனையடுத்து, குற்றவாளிகள் இருவரும் பெண்கள் என்பதாலும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதாலும், 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்குமாறு உத்தரவிட்டார்.