Home ஆரோக்கியம் உளவியல் அலுவலகத்தில் மனஅழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்!

அலுவலகத்தில் மனஅழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்!

30

அலுவலக வேலையோ வீட்டு வேலையோ அழுத்தம் இல்லாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்றைக்கு இருக்கும் பணிச்சுமை பெண்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பணிக்குச் செல்லும் 70 சதவிகித பெண்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 40 சதவிகித பெண்கள் இதயம் தொடர்பான நோயினால் பாதிப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்குக் காரணம் பெண்களுக்கு ஏற்படும் பணிச்சுமைதான். பணியில் அழுத்தம் உள்ள பெண்களுக்கு மாரடைப்பு, இதயஅடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம் என்றும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பெண்கள் மருத்துவமனையின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு 17115 பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இவர்களிடம் வேலைச்சுமை அழுத்தம், வேலை பாதுகாப்பின்மை, பணியில் ஏற்படும் டார்ச்சர் பற்றி தொடர்ந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. இவர்கள் அளித்த பதிலின் அடிப்படையில், அதிக வேலைச்சுமை அழுத்தமுடைய பெண்களுக்கு, மாரடைப்பு மற்றும் தமனிகளில் இரத்த அடைப்பு பாதிப்பிற்கான வாய்ப்பு 40 சதவீதம் இருந்து தெரிய வந்தது.

வேலைசுமை உள்ள பெண்களின் இதய ஆரோக்கியம் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்தில் பாதிக்கப்படுகிறது என்று இந்த ஆய்வினை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர் மிச்செல்லி ஆல்பர்ட் கூறியுள்ளார்.

ஒருவரின் உடல் ஆரோக்கியத்தில் வேலைச்சுமை சாதக, பாதக நிலைகளை ஏற்படுத்துகிறது. சுமை நிறைந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வேலைச்சுமை மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்கும் வேலையில் தனிப்பட்டவரின் திறனை முடிவு எடுக்கும் வாய்ப்பை குறைக்கிறது. அதேசமயம் இது நேரடியாக பெண்களின் மாரடைப்பு, பக்க வாதம், இறப்புக்கு வழிவகுப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.