Home ஆரோக்கியம் ஐடி பணியில் உள்ள ஆண்களின் ஆணுறுப்பு பாதிப்படையும்

ஐடி பணியில் உள்ள ஆண்களின் ஆணுறுப்பு பாதிப்படையும்

103

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுவதாக மருத்து ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அலுவலக பணி தான் உலகம் என்றும், வேறு எதுவும் வாழ்க்கையில் இல்லை என்றும் சிலர் எண்ணுகின்றனர். அதனால் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிர்ச்சி தரும் மருத்துவ ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அருகில் ரொம்ப நேரம் இருந்தோம் என்றால் அவற்றின் கதிர்வீச்சு செக்ஸ் வாழ்க்கையை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஐடி துறையில் பணிபுரிபவர்கள் எப்போதும் வேலை பார்த்து கொண்டு இருப்பதால் சக மனிதர்களிடம் பேசுவது இல்லை என்றும், வெளியே எங்கேயும் செல்வதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் மன அழுத்தம் ஏற்படுவதுடன் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர். எலக்ட்ரானிக் பொருட்களின் கதிர் வீச்சு வீரியத்தால் ஆண்களுக்கு ஆணுறுப்பு பிரச்னை ஏற்படுகிறது. பெண்களுக்கு செக்ஸ் ஆசை தூண்டுதலில் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.