மும்பை ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் விவாகரத்து கோரும் நிலை அதிகரித்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது. அந்த ஐ.டி பெண்கள் அந்த மன நிலைக்கு வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து மனநல ஆலோசகர்,குடும்ப நல ஆலோசகர் மற்றும் செக்ஸ் ஆலோசகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் பல பெண்களின் அடிப்படை பிரச்னையே செக்ஸ் பிரச்னை தான் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் கல்வி மற்றும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் விவாகரத்தும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் தற்போது ஐ.டி பெண்கள் அதிகமாக விவாரத்துக்கோரி வழக்கறிஞர்களை சந்திக்கிறார்கள் எனற ஒரு விபரமும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி வழக்கறிஞர்களே பரிந்துரை செய்து மனநல ஆலோசகர், குடும்ப நல ஆலோசகர் மற்றும் செக்ஸ் ஆலோசகர் போன்றவர்களிடம் அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது.
நேரடியாக விவாகரத்து கேட்கும் பெண்களிடம் பேசும்போது அவர்கள் கூறும் காரணங்கள் நம்மை சில நேரங்களில் ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது. பெண்களும் உணர்ச்சியுள்ள ஜீவன்கள்தானே. அவர்களிடம் அன்போடும்,பரிவோடும் இருப்பது ஒவ்வொரு கணவர்களின் கடமை.
இதுகுறித்து மனநல ஆலோசகர் கூறும்போது, ஐ.டி பெண்கள் குறிப்பாக விவாகரத்து கோருவதற்கு காரணம் அவர்களின் மனதை புரிந்த கொள்ளாத கணவர்கள். சம்பாதிக்கும் அளவுக்கு வேறு எதையும் பற்றி சிந்திக்காததும் ஒரு காரணம். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்தால் மட்டும் போதுமா? அதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் உண்டல்லவா? கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசிக்கொள்வதே மனதை இலகுவாக்கும். இயந்திரம் போல் வாழ்வதில் அர்த்தமில்லையே?
மேலும் ஐ.டி யில் வேலை செய்யும் ஆண்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர்களுடன் செலவிடுவதால் மனச்சோர்வு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவர்கள் எந்நேரமும் கேம்ஸ் விளையாடுவது அல்லது ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் செலவிடுவது என்று அதிலேயே நேரம் போகிறது. இதனாலும் அவர்களின் மனம் சோர்வடைகிறது.
அதைப்போன்ற ஆண்களுக்கு வேறு எதிலும் நாட்டம் ஏற்படுதில்லை.குறிப்பாக செக்ஸ் வாழ்க்கையை மறந்து போகிறார்கள். சிறிய வயதிலேயே கை நிறைய சம்பளம் வாங்குவதால் இலகுவாக காதலில் வீழ்ந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.பின்னர் வாழ்க்கை பற்றிய புரிதல் இன்றி விவாகரத்து கோருகிறார்கள்.
இதில் பாதிக்கப்படுவது இருவருமே தான். பெண்களும் கேம்களிலும்,சமூக வளைதளங்களிலும் இயங்குவதால் அவர்களுக்கும் வேறு எதைப்பற்றியும் சிந்தனை வராது. நேரடியாக செக்ஸ் ஈடுபாடே இருக்காது. செக்ஸ் வாழ்க்கை கிடைக்காதபோது, பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக விவாரத்துக்கோரி கோர்ட் ஏறிவிடுகிறார்கள்.
ஆனால்,பாதிக்கப்படும் ஆண்கள்,மனைவி மூலமாகவே விவாகரத்து வரவேண்டும் என்று காத்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் இருதுருவமாக வாழ்வதால், கடைசியில் பெண்கள் அவர்களே விவாகரத்து முடிவுக்கு வந்துவிடுகின்றனர். மனச்சிதைவு ஏற்படுவதால் ஏற்படும் இந்த நிலையை மாற்றுவதற்கு ஐ.டி துறையில் பணியாற்றும் ஆண்களும்,பெண்களும் மனம்விட்டு பேசிக்கொள்வதுடன், இயந்திரத்தனமாக செல்போன்களிலும், லேப்டாப்களிலும் நேரங்களை செலவிடுவதை குறைத்துக்கொண்டு நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்திக்க வேண்டும்.
வாழ்க்கை பற்றி புரிந்து கொண்டு, பிரிதல் வருவதற்கு முன்னரே தம்பதிகள் மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. விவாகரத்தே வாழ்க்கைக்கு தீர்வாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.