ஆண்களை இருவகைகளாக பிரிப்பது எளிது, பெண்களை புகழ்வோர், இகழ்வோர். என்றோ, எங்கோ யாருக்கோ ஏதுனும் தவறு இழைக்கப்பட்டது என்ற காரணத்திற்காக நாம், அனைவரையும் அவ்வாறு எண்ணுவது தவறு. அதுவும், தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இருந்து பெண்களை இகழும் போக்கு அதிகரித்து வருவது கூட இதற்கு ஓர் காரணமாக கூறலாம்.
நம் வீட்டிலும், உடன்பிறந்தோர், தாய், அண்ணி என எவ்வளவோ பெண்கள் இருக்க, நாம் மற்ற வீட்டு பெண்களை மிகவும் தரம் தாழ்த்திக் குறிப்பிடுவது, எண்ணுவது தவறு என்பதை விட அறியாமை என்று தான் கூற வேண்டும். கலாச்சார மாற்றத்தில் ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டதைப் போல, பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள நூறு சதவீத உரிமை உண்டு.
அத்துமீறல்கள் தவறு தான். ஆனால் வற்புறுத்துதல், அடக்கியாள நினைப்பது அதை விட தவறான அணுகுமுறை. பன்னாட்டு நிறுவனங்களில் பணிப்புரிவோர், ஷாப்பிங் மால்களில் பணிப்புரிவோர் போன்றவர்கள் தான் பல வன்கொடுமைகளுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் ஆளாகின்றனர். உண்மையில், அவர்களில் பலர் தான் வீட்டிற்காகவும், தன்னிலை உயர்வதற்காகவும் உழைத்து வருகின்றனர்….
இனி, எந்த சில விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்…