கருப்பை வாய் அழற்சி என்றால் என்ன?
கருப்பை வாயில் (கருப்பையின் அடிப்பகுதி) ஏற்படும் வீக்கமே கருப்பை வாய் அழற்சி எனப்படுகிறது. கருப்பை அழற்சி என்பது பொதுவான பிரச்சனையாகும், மொத்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு, தம் வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்
நோய்த்தொற்று மூலமாகவே கருப்பை வாய் அழற்சி உண்டாகிறது, இந்த நோய்த்தொற்றானது பாதிக்கப்பட்ட திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்வரும் காரணங்களால் நோய்த்தொற்று ஏற்படலாம்:
பின்வரும் பால்வினை நோய்களால் நோய்த்தொற்று ஏற்படலாம்:
கிளமீடியா
பிறப்புறுப்பில் படர்தாமரை அல்லது சிற்றக்கி
ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (HPV)
திரிக்கோமோனியம்
கொனோரியா
பாக்டீரியா அதிகரித்தல்: யோனியில் உள்ள பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைந்து இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
பின்வரும் பொருட்களின் ஒவ்வாமை காரணமாக நோய்த்தொற்று ஏற்படலாம்:
லேட்டக்ஸ் ஆணுறை
விந்தணுக்கொல்லிகள்
இடைத்தகடு
டாம்பூன் இரசாயனங்கள்
கருப்பை வாய் அழற்சி குறுகிய காலத்திற்கு இருந்தால் அது கடுமையானது என்றும், சில மாதங்களுக்கு நீடித்தால் அது நாள்பட்ட கருப்பை வாய் அழற்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், நாள்பட்ட கருப்பை வாய் அழற்சி ஏற்படலாம்.
ஆபத்துக் காரணிகள்
பலருடன் உடலுறவு கொள்தல் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற அதிக ஆபத்துள்ள பாலியல் நடத்தைகள்
இதற்கு முன்பு பால்வினை நோய்களால் பாதிப்படைந்திருப்பது
அறிகுறிகள்
சில பெண்களுக்கு கருப்பை வாய் அழற்சிக்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.அறிகுறிகள் இருந்தால் அவை பின்வருபவற்றில் அடங்கும்:
யோனி வலி
உடலுறவில் ஈடுபடும்போது வலி
கீழ் இடுப்புப் பகுதி கனமாக இருத்தல் அல்லது அழுத்தமாக இருத்தல்
நோய் கண்டறிதல்
கருப்பை வாய் அழற்சியைக் கண்டறிய, உங்கள் மருத்துவர் பின்வரும் சோதனைகளைப் பரிந்துரைக்கலாம்:
கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை: உங்கள் மருத்துவர் கையுறை அணிந்த விரலைப் பயன்படுத்தி, கருப்பை வாய் உட்பட உங்கள் கீழ் இடுப்புப் பகுதியில் அசாதாரண மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்வார்.
பாப் ஸ்மியர்: பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய்ப் பகுதியில் இருந்து லேசாக மேற்பரப்பில் உரசி மாதிரி சேகரிக்கப்படும்.பின்னர், சேகரிக்கப்பட்ட அந்த மாதிரியில் பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
சிகிச்சை
கருப்பை வாய் அழற்சிக்கு காரணம் பால்வினை நோய்கள் இல்லையெனில், எந்தவித சிகிச்சையும் தேவையில்லை. பால்வினை நோய்கள்தான் காரணமெனில், உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் சிகிச்சைத் தேவை.
கருப்பை வாய் அழற்சியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகள்:
ஆண்டிபயாடிக்ஸ்: கிளமீடியா அல்லது கொனோரியாவைக் குணப்படுத்துவதற்கு பயன்படுகிறது.
ஆன்டிவைரல்கள்: படர்தாமரைத் தொற்றுகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
கருப்பை வாயில் உள்ள இயல்பற்ற செல்களை அழிக்க, உங்கள் மருத்துவர் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம்:
கிரியோசர்ஜரி (திரவ நைட்ரஜன்)
(சில்வர் நைட்ரேட்) போன்ற இரசாயனம்
லேசர் சிகிச்சை
எலெக்ட்ரிக் கரண்ட்
தடுத்தல்
கருப்பை வாய் அழற்சி ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:
உடலுறவில் ஈடுபடும்போது ஆணுறையைப் பயன்படுத்துதல், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்
பிறப்புறுப்பை பீய்ச்சியடித்துக் கழுவுதல் மற்றும் டாம்பூன்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்தல், ஒவ்வாமை காரணமாக கருப்பை வாய் அழற்சி ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்
சிக்கல்கள்
கருப்பை வாயில் உள்ள நோய்த்தொற்று, கருப்பைக்கு பரவக்கூடும்.
கிளமீடியா அல்லது கொனோரியா போன்ற பால்வினை காரணமாக ஏற்படும் கருப்பை வாய் அழற்சி, கீழ் இடுப்புப் பகுதி அழற்சி (பெண் இனபெருக்கப் பாதையில் வீக்கம்) ஏற்பட வழிவகுக்கும்.
அடுத்து செய்ய வேண்டியவை
பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்:
இயல்புக்கு மாறான இரத்தப்போக்கு (மாதவிடாய் அல்லாத நாட்களில்)
யோனியிலிருந்து திரவம் கசிதல்
உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படுதல்