ஜல்சா செய்திகள் இந்தியர்கள் கலாச்சாரம் மிக்கவர்கள். சில விசயங்களை வெளியில் விவாதிக்க தயங்குபவர்கள். அழகியல்களையும், புனிதங்களையும் போற்றிக் காப்பவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்கள் என்று நம் சிறுவயதில் இருந்தே நிறைய விசயங்கள் நமக்கு போதிக்கப்பட்டு, நாமும் நெறிகளை பாதுகாத்து நம் கலாச்சாரத்தைப் போற்றி வருகிறோம். இன்றளவும் சில விசயங்கள் இந்து மதத்தில் இருந்து வந்தவை என நம் கண்முன் கற்பிக்கப்பட்டாலும், இந்து மதம் என்பது ஒரு மதம் இல்லை. அது ஒரு வாழ்வியல் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் ஆயக் கலை 64 என்று பிரித்து, அனைத்திலும் திறன் பெற்று விளங்கியதற்கான கோடி கோடி சான்றுகள் நம் காலுக்கடியில் புதைந்துள்ளன. சரி.. காம சூத்திரம் எனும் கலையைக் கூட கஜூராஹோ கோயில்களில் காணலாம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த விசயம்தான். ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு கோயில்களிலும் இந்த கலை இருக்கிறது என்பது நீங்கள் கேள்விப்படாத விசயமாக இருக்கிறதா. ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால், இதோ உங்களுக்கு தெரியப்படுத்துவதற்கான கோயில்களின் தொகுப்பு.
கஜூராஹோ, மத்தியபிரதேசம் கஜூராஹோ கோயில்கள் மத்திய இந்தியாவை ஆண்ட சந்தேள ராஜ வம்சத்தினரால் 950 – 1050 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கின்றன. கஜூராஹோ ஸ்தலத்தில் மொத்தம் 85 கோயில்கள் உள்ளன. இவற்றில் 22 மட்டுமே தற்போது கால ஓட்டத்தில் முழுமையாக மிஞ்சியிருக்கின்றன. வார்த்தைகளுக்குள் அடங்காத சிற்பக்கலை நுணுக்கங்கள் நிரம்பி வழியும் இந்த அற்புத வரலாற்று ஸ்தலம் உலகாளவிய கவனத்தை பெற்றுள்ளது. 1986-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது இந்த கஜுராஹோ கோயில் ஸ்தலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது. கஜூராஹோ கோயில்களில் காணப்படும் சிற்பக்கலை அம்சங்களும் சித்தரிப்புகளும் மானுட முன்னோர்களின் வாழ்வியல் உன்னதங்கள் மற்றும் நாகரிகத்தை குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் பாலுணர்வு சார் அம்சங்களை பிரதிபலிப்பதாக ஒரு புரிதல் நிலவினாலும் உண்மையில் அவ்வகை சிற்பங்கள் முக்கியமான ஹிந்துக்கடவுளர்களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களின் ஒரு அலங்கார படைப்பு அம்சங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி செல்வது எல்லா போக்குவரத்து மார்க்கங்கள் மூலமாகவும் கஜூராஹோவுக்கு சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம். விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய வசதிகள் போன்ற அனைத்தையும் இந்த சுற்றுலாத்தலம் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுத்தலத்தை இஷ்டம் போல் சுற்றிப்பார்க்க டாக்சிகள், ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவை வாடகைக்கு கிடைக்கின்றன. குளிர்காலம் அல்லது குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் கஜூராஹோவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.
அருகில் காணவேண்டிய இடங்கள் அஜ்யகர் கோட்டை, தொல்லியல்துறை அருங்காட்சிகம், ராணேஹ் நீர்வீழ்ச்சி, கண்டாய் கோயில், கணடரியா மஹாதேவ் கோயில், கங்காவ் அணை, தேவி ஜக்தாம்பா கோயில், ஷில்ப்கிராம், ஷாந்திநாத் கோயில், துபேலா மியூசியம், ஆதிநாத் கோயில், கலிஞ்சார் கோட்டை, துல்ஹாதேவ் கோயில், ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அண்ட் ஃபோக் ஆர்ட், மாதங்கேஷ்வரர் கோயில், சித்ரகுப்தர் கோயில், ஜவரி கோயில், சதுர்புஜ் கோயில், பிரம்மா கோயில், பீஜாமண்டல் கோயில், லட்சுமி கோயில், பேணி சாகர் அணை, பர்ஷவநாதர் கோயில், வாமன கோயில், சௌஸத் யோகினி கோயில், லட்சுமண கோயில், ஜெய்ன் அருங்காட்சியகம், விஸ்வநாத் கோயில் என ஏகப்பட்ட இடங்கள் அருகில் காணவேண்டியவை
மார்க்கண்டேஸ்வரர் கோயில், மகாராஸ்டிரா உள்ளூர் மக்களால் மார்க்கண்டேஸ்வரா என வணங்கப்படும் சிவன் கோயில் மகராஸ்டிர மாநிலம் காட்சிரோலியில் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இந்த கோயிலின் தெய்வங்கள் சக்தி வாய்ந்தவை என்பது மட்டுமல்ல. இங்கு இருக்கும் கலைப் படைப்புகளும் தான். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு சாதாரண இந்திய கோயிலைப் போலத்தான் காட்சிதருகிறது இந்த மார்க்கண்டேஸ்வரர் கோயில், ஆனால் இதன் குடைவரை அமைப்புகள் நமக்கு ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது என்ற எண்ணத்தில் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால், அத்தனையும் காமக் கலை படைப்புகள்,.
மர்மங்கள் இங்குள்ள சில மக்களுக்கு ஒரு விசயம் மர்மமாக அறியப்படுகிறது. இது வாய்வழியாக வந்த செய்திதான், செவிவழியாக கேட்டு பரப்பி இருக்கிறார்கள், இதை அவர்களின் முன்னோர்கள் கூறியதாக சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள். அதாவது, தேவர்கள் கட்டிய இக்கோயிலை அரக்கர்கள் இப்படி மாற்றிவிட்டார்கள் என்பதே அவர்களின் நம்பிக்கை. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த இடத்தைப் பற்றி கூறும்போது காமக் கலைக்காகவே இந்த கோயில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். எப்படி செல்வது மார்க்கண்டேஸ்வரர் கோயில், ஒரு சிவன் கோயிலாகும், இது மகராஸ்டிர மாநிலத்தில் காட்சிரோலி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. அந்த நகரத்திலிருந்து 40 கிமீ பயணித்தால் மார்கண்டேஸ்வரர் கோயிலை எளிதில் அடையலாம்.
படவலி கோயில் மத்தியபிரதேசம் படவலி கோயில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் குவாலியர் அருகே அமைந்துள்ளது. இதன் கட்டுமானக் கலை முழுதும் குஜ்ஜார்- பிரதிகார வடிவத்தில் இருக்கும். இதன் அருகே நிறைய கோயில்கள் சிறு சிறுதாக அமைந்துள்ளன. இந்த கோயில்களைப் பார்க்கும்போது சிவ, வைணவ, சக்தி வழிபாட்டுக்குரிய தெய்வ வழிபாட்டு முறைகளைக் கொண்ட கோயில்கள் இவை என்பது அறிய முடிகிறது. இது 8ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டிருக்கவேண்டும். மத்தியப் பிரதேச அரசின் தொல்லியல் துறை ஆய்வுகளின் படி இந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று அறியப்படுகிறது. 13ம் நூற்றாண்டில் இந்த கோயில்களில் பல அழிக்கப்பட்டுவிட்டன.
எப்படி செல்லலாம் இந்த கோயில் குவாலியரிலிருந்து 35கிமீ தூரத்தில் வட திசையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சில இடங்களில் இருக்கும் சிலைகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று பிடிபடும். அதுதான் கஜுராஹோ மற்றும் பல கோயில்களில் இருக்கும் காமக் கலை வடிவத்தில் செதுக்கப்பட்ட சிலைகள். இவைகளில் பல அழிக்கப்பட்டுவிட்டன என்றாலும் ஒரு சில சற்று சிதைக்கப்பட்ட நிலையில் இன்னும் இருக்கிறது.
ரணக்பூர் ஜெயின் கோயில், ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோயில் ஜெயின் இனத்தாருக்கான ஐந்து முக்கியமான புண்ணிய யாத்ரீகத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஆதிநாத பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மெலிதான நிறம் கொண்ட பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்ட இக்கோயில் மிக அழகான தோற்றத்தைக்கொண்டுள்ளது. சேத் தர்ணா ஷா எனும் ஜைன வணிகர் மற்றும் மேவார் மன்னர் ராணா கும்பா ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கோயிலை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. சாமுகா எனப்படும் பிரதான கோயில் வளாகத்தில் இதர ஜெயின் கோயில்களும் இடம் பெற்றுள்ளன. இக்கோயிலின் அடித்தளப்பகுதி 48000 சதுர அடி பரப்பளவில் பரந்துள்ளது. 80 குமிழ் கோபுர அமைப்புகள், 29 மண்டபங்கள் மற்றும் 1444 தூண்களைக்கொண்ட இந்தக் கோயிலின் நுணுக்கங்கள் அக்கால கலைஞர்களின் கட்டிடக்கலை அறிவை பறைசாற்றுகின்றன. இந்த தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அலங்கார அம்சங்களைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒவ்வொரு தூணிலும் விதவிதமான அலங்காரவடிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. பர்ஷ்வநாதர் மற்றும் நேமிநாதர் கோயில்கள் பிரதான கோயிலை நோக்கியவாறு அமைந்துள்ளன. கஜுராஹோ சிற்பங்களை ஒத்திருக்கும் சிற்ப வடிப்புகளை பயணிகள் இந்த கோயில்களில் காணலாம்.
எப்படி செல்வது உதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் ரணக்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். மேலும், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமானத்தளமாக அமைந்துள்ளது. வெளிநாட்டுப்பயணிகள் இங்கிருந்து இணைப்புச்சேவைகள் மூலமாக வரலாம். மேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் வேன்கள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன. மேலும் அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ரணக்பூருக்கு அருகிலுள்ள நகரங்களிலிருந்து அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
சூரிய கோயில் ஒடிசா ஒடிஷா மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை மரபின் உச்சபட்சமான அழகியல் அம்சங்களை இங்கு தரிசிக்கலாம். கற்களில் வடிக்கப்பட்ட மஹோன்னத கட்டிடக்கலை அற்புதங்களை கொண்ட இந்திய புராதன சின்னங்களின் மத்தியில் இந்த கோயில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. இந்த கோயிலில் அழகை தரிசிக்க வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேடி வருகின்றனர். நரசிம்மதேவா எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் 13ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் வளாகத்தில் 24 சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ஒரு தேர் அமைப்பு வெகு நுணுக்கமான சிற்பக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சூரியக்கடவுளின் வாகனமாக இந்த தேர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கலைப் படைப்பின் உயரம் வெகு உன்னதமான ஒரு கற்பனைப்படைப்பாகவும் மற்றும் கட்டிடச்சிற்பக்கலை நிர்மாணமாகவும் இந்த தேர் அமைப்பு கருதப்படுகிறது. கொனார்க் நகரின் இதர சிறப்பம்சங்கள் யாவற்றையும்விட இது அதிக அளவில் ரசிக்கப்படும் அம்சமாகவும் புகழ் பெற்றுள்ளது. 1984ம் ஆண்டில் உலகப்பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இந்த சூரியக்கோயில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு பெருமைக்குரிய அம்சமாகும். கொனார்க் நடனத்திருவிழா எனும் பிரபல்யமான நிகழ்வு இந்த சூரியக்கோயில் வளாகத்தில்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்த்தப்படுகிறது. இந்த அற்புதமான கோயிலின் சில பகுதிகள் கால ஓட்டத்தில் சிறிது சேதமடைந்து காணப்பட்டாலும் இதன் பொலிவு இன்றளவும் குறையாமல் பார்வையாளர்களை பிரமிக்கச்செய்கிறது.
குஜராத் சூரிய கோயில் இந்த அழகிய பண்டைய கோவில் இந்திய கோவிலின் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. இந்தச் சூரியக் கோவில் சுமார் 900 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. சௌராட்டியத்தை ஆண்ட சோலங்கி வம்ச மன்னர்கள் இந்த கோயிலைக் கட்டியதாக கூறப்படுகிறது. இது சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில், அழகிய சிற்பங்களும், கலை நுணுக்கங்களுடன் கூடிய இப்பெரிய சூரியன் கோயில் புஷ்பாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அகமதாபாத்திலிருந்து 102 கிமீ தொலைவிலும், மெக்சனா நகரத்திலிருந்து 25கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சூரிய குண்டம் ராமகுண்டம் என்றும் அழைக்கப்படும் இது பெரிய செவ்வக வடிவில் அமைந்த ஆழமான குளம். இங்கு குளித்த பின்னரே மக்கள் கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்கிறார்கள். இதன் அமைப்பே இதன் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றிதழ் அளிக்கும்.
ஓசியன், ராஜஸ்தான் இந்து மற்றும் சமண மதத்தவர்கள் இந்த கோயிலில் வழிபட்டு வருகிறார்கள். இந்த கோயில் கிமு 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரியவருகிறது,. சாட்சியமா மாதா எனும் பெண் கடவுளை இந்த கோயிலில் மக்கள் வழிபடுகிறார்கள். அவரை வழிபடுவதால் வீட்டில் துன்பம் நீங்கி வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் சில இடங்களில் இருக்கும் சிலைகள் காதலையும், காமத்தையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. அதன்படி கவர்ச்சிகரமான சிலைகளும், கலைகள் நிறைந்த உருவங்களும் இங்கு நிறைய காணப்படுகின்றன.
விருபாக்ஷா கோயில் கர்நாடகம் சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இந்த விருபாக்ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் இந்த கோயிலில் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. பம்பாபதி என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் முக்க மண்டபம் (ரங்க மண்டபம்) என்று அழைக்கப்படும் கருவறை, மூன்று வாயில் அறைகள் மற்றும் தூண்களை கொண்ட ஒரு மண்டபம் போன்றவை காணப்படுகின்றன.விருபாக்ஷா கோயில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆதியில் ஒரு சில சிலைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த கோயில் பின்னாளில் விரிவுபடுத்த பட்ட தாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
காமத்துக்கான கடவுள், ராஜஸ்தான் இந்த கோயில்தான் மிகவும் வித்தியாசமான கோயில், ஏனென்றால் மற்ற கோயில்களில் ஒரு பகுதியாக இருந்த காமக்கலை, இந்த கோயிலில் காமத்துக்கான கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இதுபோல நீங்கள் தமிழகத்தின் நிறைய கோயில்களின் கட்டிடக் கலையை கவனித்தீர்கள் என்றால், அங்கு சிலைகள் காமக்கலை தாங்கியே நிற்கும். ஆனால் அது அந்த அளவுக்கு தெளிவாக தெரியாது. பெண் சிலைகளை மார்புகளை காட்டியும், ஆண் சிலைகள் மர்ம உறுப்பை காட்டியவாறும் நிறைய கோயில்களில் இருக்கின்றன. இதைவிட இன்னொரு விசயம் இருக்கிறது. சிவன் கோயில்களே உலகின் மனித இனத்தின் மூலமாக அமைக்கப்பட்டதுதான் என்கிறார்கள். உண்மையில் மனித இனத்தின் சந்ததிகளைப் பற்றி விளக்கவே இந்த லிங்கங்கள் உருவாக்கப்பட்டன என்பது பலரின் கருத்து. இதை பலர் எதிர்த்தாலும், இப்படியும் ஒரு கருத்து நிலவுகிறது என்பதை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையல்லவா.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள லிங்கங்கள்!!! மனித இனத்தின் பிறப்பின் ரகசியங்களை பறைசாற்றும் லிங்கங்கள். இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோயில் லிங்கங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கு தெரியுமா? இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.