சூடான செய்திகள்:இன்னும் திருமணமாகாத சிங்கிள் 90ஸ் கிட்ஸ் இந்த பதிவை படித்து மனம் நொந்துக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் என்றாவது சராசரியாக ஆண் / பெண் எப்போது கன்னித்தன்மை இழக்கிறார் என்று யோசித்தது உண்டா? ஆண்களிடம் இதை கண்டறிவது சிரமம். ஆனால், நாம் கற்பு பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல, நம் சௌகரியத்திற்காக ஆணுக்கும், கற்புக்கும் சம்மந்தம் இல்லாதது போல ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
காலம் கெட்டுப்போச்சு, இந்த காலத்து இளைஞர்கள் எல்லாம் ரொம்ப மோசம் என்று கதறும் மக்களே… இது தான் கேள்வி, எந்த வயதில் சராசரியாக ஒரு பெண் கன்னித்தன்மை இழக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?
சமீபத்திய ஆய்வு உலகளவில் பெண்கள் சராசரியாக எந்த வயதில் கன்னித்தன்மை இழக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதை வைத்து பார்த்தல்… 2K கிட்ஸ்களைவிட, 90ஸ் கிட்ஸ் தான் ரொம்ப மோசம் என்று தோன்றுகிறது.. ஆய்வு முடிவுகளை காணும் போது உங்களுக்கும் இதே உணர்வு தோன்றும்…
சரசாரி வயது? சராசரியாக பெண்கள் எந்த வயதில் கன்னித்தன்மை இழக்கிறார்கள் என்று உலகம் முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில், ஐஸ்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டை சேர்ந்த பெண்களின் கன்னித்தன்மை இழக்கும் சராசரி வயது 17.4 ஆக இருக்கிறது
இந்திய பெண்கள்? இந்த வகையில் கன்னித்தன்மை இழக்க பொறுமையாக இருக்கும் பெண்கள் என மலேசியா பெண்கள் அறியப்படுகிறார்கள். இவர்களது சராசரி வயது இதில் 23 ஆக இருக்கிறது. இந்திய பெண்கள் இந்த பட்டியலில் சராசரியாக 22.9 என்ற வயதில் கன்னித்தன்மை இழக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது
2007ல் இதே போல ஒரு ஆய்வு பத்து ஆண்டுகளுக்கு முன் 2007ம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் எடுக்கப்பட்ட தகவல்களில், சராசரியாக உலகளவில் பெண்கள் கன்னித்தன்மை இழக்கும் வயது 15.2 ஆக இருந்தது. நல்லவேளையாக இந்த ஆய்வில் வயது 17.4 ஆக அதிகரித்துள்ளது. இது இந்த தலைமுறையில் பொறுமை காக்கிறார்களா? இல்லை செக்ஸில் ஆர்வம் குறைந்துவிட்டதா என இரண்டு பெரும் கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் முன் எழுந்துள்ளது.
அமெரிக்காவில்… சென்ற ஆண்டு (2017) CDCயின் தகவல் படி, தேசிய இளைஞர் அபாய நடவடிக்கை ஆய்வு அறிக்கை தகவலில், அமெரிக்காவின் 40% மேல்நிலை பள்ளி மாணவர்கள் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்று தகவல் வெளியானது. மேலும், இதே ஆய்வு பத்து ஆண்டுகளுக்கு முன் 2007ல் நடத்தப்பட்ட போது இந்த சதவிதம் 48% ஆக இருந்தது.
நான்கு அல்லது… 2017ம் ஆண்டு ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட மாணவர்களில் பத்து சதவிதத்தினர், தங்களுக்கு நான்கு அல்லது அதற்கும் மேலான செக்ஸுவல் பார்ட்னர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இது கடந்த ஆய்வில் 15% ஆக இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் இருந்து இந்த ஆய்வினை CDC மேற்கொண்டு வருகிறது. அதில், கடந்த ஆண்டு பதிவானது தான் மிகவும் குறையாவன சதவிதம் என்று குறிப்பிட்டுள்ளது.
மாற்றம் எதனால்? இன்றைய இளைய தலைமுறையினர் டேட்டிங், அவுட்டிங் செல்வதில் தான் அதிக ஆர்வம் கட்டுகிறார்களே தவிர, அவர்களுக்கு செக்ஸுவல் செயல்பாடுகளில் ஈடுபட பெரிதாக ஆர்வம் இல்லை என்றும். இதனால் தான், மிக இளம் வயதில் கன்னித்தன்மை இழக்கும் சதவிகிதம் குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஓரினச்சேர்க்கை… மேலும், ஆய்வுகளின் படி பார்த்தால்… ஸ்ட்ரெயிட் செக்ஸுவல் ஆர்வம் கொண்டவர்களை விட, ஓரினச் சேர்கையாளர்கள் மிக சிறு வயதில் செக்ஸுவல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் சராசரியாக தங்கள் பதின் வயதில் அதாவது 14 வயதில் செக்ஸுவல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
முக்கிய காரணம்… ஒரு பெண் திருமணத்திற்கு முன் அல்லது மிக இளம் வயதில் கன்னித்தன்மை இழக்க முக்கிய காரணமாக இருப்பது கவனமின்மை அல்லது சரியான அளவு விழிப்புணர்வு இல்லாதது தான் என்றும். மேலும், இவர்களுக்கு கன்னித்தன்மை இழப்பதில் இருக்கும் ஆர்வமானது, அதன் பாதக, சாதகங்கள் குறித்து இருப்பதில்லை. பலரும் பாதுகாப்பான முறையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.