Home அந்தரங்கம் தமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி ?

தமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி ?

304

அந்தரங்க தகவல்:செக்ஸ்” – இந்த வார்த்தையை தமிழில் ‘பாலியல்’ என்று குறிப்பிட்டாலும், அதிகம் படிக்காத அல்லதபடிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் அதன் உண்மையான வீச்சு புரிபடுகிறது. ு

அதே சமயம் செக்ஸ் என்பது பாலியல் வார்த்தையை மட்டும் குறிக்காது; ஆண் அல்லது பெண் என்ற இனத்தை சுட்டிக்காட்டும் இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது போன்ற ஒரு தருணத்தில் கூட – கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற படிவங்களை நிரப்புகையில் – பாலியல் என்ற அர்த்தமும் நம்மவர்களின் மனதில் மின்னலாய் வந்துவிட்டுத்தான் போய்கிறது.

அந்த அளவுக்கு பெரும்பாலான இந்தியர்களது மனதில் செக்ஸ் என்ற வார்த்தைக்கு அய்யே…சே! ஆபாசம், சாமி கண்ணைக் குத்திடும்… என்றெல்லாம் இந்த இண்டர்நெட் யுகத்திலும், அது இன்னும் ஒரு அசிங்கமான வார்த்தையாகவே உள்ளதாக வியப்பு தெரிவிக்கின்றனர் பாலியல் மருத்துவ மற்றும் மனோதத்துவ நிபுணர்கள்.

அறியா வயதில் உள்ள சிறு குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம், இனப்பெருக்க உறுப்பு குறித்தும் பெற்றோர்களிடம் கேள்வியாக வெளிப்ப்படும். அப்படி தங்களது குழந்தைகள் கேட்கும் கேள்வியை பார்த்து பதறிப்போய் விடுகின்றனர் பெற்றோர்!

“இதுபோன்றெல்லாம் பேசக்கூடாது… கேட்கக்கூடாது!” என்ற அதட்டலுடன் நாலு சாத்து சாத்தி உட்கார வைத்துவிடுகின்றனர். அவர்கள் பதறுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இப்படியெல்லாம் பேசினால் கெட்டுப்போய்விடுவானோ(ளோ) அல்லது நாலு பேர் இருக்கும்போது இப்படி ஏடா கூடமாக பேசினால், மானம் போய்விடுமே…! என்ற எண்ணம்தான் காரணம்.

அவர்கள் நியாயம் அவர்களுக்குத்தான் என்றாலும், குழந்தைகள் மனதில் இன உறுப்பு குறித்த பேச்சே தவறானது என்ற எண்ணம் உருவாகிட, அதுதான் எதிர்காலத்தில் செக்ஸ் என்பதே அசிங்கம் என்ற அளவுக்கு மனதில் மிக ஆழமாக வேரூன்றி விடுகிறது.

அதே சமயம் இயல்பாகவே ஒரு எண்ணத்தை அடக்க அடக்கத்தான் அது பீறிட்டுக் கிளம்ப யத்தனிக்கும்.அப்படி அடக்கி வைக்கப்படும் உணர்வுதான், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெடித்துக்கிளம்பி விடுகிறது. அந்த மாதிரியான சமயங்களில் நிகழும் சம்பவங்கள்தான், சில சமயங்களில் கற்பழிப்பு, கொலை போன்றவற்றுக்கெல்லாம் காரணமாகிவிடுகிறது.

இது ஒருவகையானது என்றால், மறுபுறம் செக்ஸ் மீது தீராத எண்ணமும், மோகமும் மனது முழுவதும் மண்டிக்கிடக்க, அதே சமயம் அது குறித்து பேசுவதோ அல்லது அதற்கான நியாயமான தேடலோ கூட நம்மை பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்க வைத்துவிடுமோ என்ற எண்ணத்துடன் வளைய வரும் “ஹிப்போகரஸி” – Hypocrisy – தனமான பம்மாத்து மனதுகாரர்கள்.

இத்தகைய பிரிவினர்தான் இந்திய சமூகத்தில் மிக அதிமாக காணப்படுவதாக அடித்துக்கூறுகின்றனர் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள்!

கூடவே செக்ஸ் அசிங்கமானது என்ற கலாச்சார ரீதியாக மனதில் பதிந்துபோன எண்ணத்துடன், அதுபற்றிய புரிதல், அறிதல் இல்லாமலேயே திருமணத்தையும் முடித்துக்கொள்பவர்களும் பாலியல் சிக்கல்களுக்கு ஆளாகி, சமயங்களில் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

“காதலும், காமும் சேர்ந்ததுதான் ஆண், பெண் பிணைப்புக்கு அடிப்படை. காதல் இல்லா காமம் ருசிக்காது; அதுபோன்றே காமம் இல்லா காதலும் இனிக்காது. காதல் மட்டுமே போதுமென்றால் அதற்கு ஒரு பிராணி போதும். அதேப்போன்று காமம் மட்டுமே போதுமென்றால் அதற்கு ஒரு விலை மகள் போதும்.