Home ஆண்கள் இந்திய ஆண்களின் மலட்டு தன்மை அதிகரிப்பு!

இந்திய ஆண்களின் மலட்டு தன்மை அதிகரிப்பு!

35

இந்திய ஆண்களின் மலட்டு தன்மை அதிகரிப்பு! அதிர்ச்சி தகவல்!!
இந்திய ஆண்களிடம் மலட்டு தன்மை அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக மத்திய சுகாதாத துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், வட மாநில ஆண்கள் 1000 பேரிடம் ஆய்வு நடத்தினர். இதில் ஆண்கள் மத்தியில் மலட்டு தன்மை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி இந்திய ஆணின் உயிரணு எண்ணிக்கை ஒரு மில்லியில் 60 மில்லியன் என்றளவில் இருந்தது. தற்போது 20 மில்லியனாக குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது. அதிக வெப்பம் நிறைந்த சிமென்ட், ஸ்டீல் கம்பெனிகளில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.8 கோடி தம்பதிகளுக்கு மலட்டு தன்மை கண்டறியப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘இந்திய ஆண்களிடம் மலட்டு தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி பொருட்களால் உயிரணு எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்னையை குறைக்க சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது’ என்றார்.