பாலியல் தொழில் என்பது மிகவும் மோசமான, இந்திய கலாசாரத்துக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட, பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சில இடங்களில் இந்த பாலியல் தொழில் அங்கு வாழும் மக்களுக்கான பிரதான வருமானமாக இருக்கிறது.
உலகின் பல்வேறு இடங்களைப் போலவே இந்தியாவிலும் பாலியல் தொழில் மூலம் மிகப்பெரும் வருமானம் ஈட்டும் இடங்களும் உள்ளன.
சோனாகச்சி, கோல்கத்தா
சோனாகச்சியில் திரும்பிய இடமெல்லாம் பாலியல் தொழிலாளிகளைச் சந்திக்க முடியும். சோனாக்கச்சிக்கு ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்ற புகழும் உண்டு. இந்த பகுதியில் மட்டும் சுமார் 11,000 பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பெண் குழந்தை பிறக்கும்போதே பாலியல் தொழிலாளியாகப் பிறக்கும் கொடுமை காட்சியாக்கப்பட்டுள்ளது.
காமத்திப்புரம், மும்பை
இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதி இந்த காமத்திப்புரம் தான். இங்கு வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண்களால், அப்பகுதியில் ஒரு பீடி சுற்றும் தொழில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. 1980-களில் ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம் ஆகியோர் இந்த காமத்திப்புரத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
புத்வார், புணே
புத்வார் பகுதி முழுக்க எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில், ஏறக்குறைய 5000 பாலியல் தொழிலாளிகள் வசிக்கின்றனர். இந்த புத்வர் பகுதி தான் இந்தியாவில் உள்ள மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாகும்.
மீர்கஞ்ச், அலகாபாத்
இங்கு அங்கீகரிக்கப்படாத, சட்டத்துக்குப் புறம்பாக பாலியல் தொழில் செய்யப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சாலையில் போகும் ஆண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்வதுண்டு. இந்த பகுதிக்கு செல்பவர்களுக்கு அழகான ஆபத்துகள் எப்போதும் காத்திக்கொண்டிருக்கும்.
ஜி.பி. ரோடு, டெல்லி
டெல்லியில் உள்ள ஜி.பி.ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் பாலியல் தொழிலை மையமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களில், தரைத்தளத்தில் ஆட்டோமொபைல் போன்ற கடைகளும் மேல்தளங்களில் பாலியல் தொழிலும் நடைபெறுகின்றன.