Home பெண்கள் தாய்மை நலம் அதிகரித்து வரும் செயற்கை கருத்தரிப்பு முறை

அதிகரித்து வரும் செயற்கை கருத்தரிப்பு முறை

28

அதிகரிக்கும் குழந்தையின்மைப் பிரச்சினைகளால் மலடு நீக்க கிளினிக்குகளும், செயற்கை முறை கருத்தரிப்புக்கான மருத்துவமனைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2010, 12ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிளினிக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதம் கூடுதலாகியிருந்தது.

இது தற்போதைய புள்ளிவிவரப்படி இந்த எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுதொடர்பான விவரத்தை இந்திய செயற்கை முறை கருத்தரிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ள பெண்களுக்கு இப்போது மலடு நீக்க சிகிச்சைகள் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளன. இப்படிப்பட்ட சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மலட்டுத்தன்மை என்பது அதிகரிக்கவில்லை என்ற போதிலும் கூட அதுதொடர்பான மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக உறைய வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்துவது முதல் வாடகைத் தாய் வரை பல நுட்பங்கள் இப்போது வந்து விட்டன. இதில் 64 சதவீதம் பேர் உறைய வைத்த, பாதுகாக்கப்பட்ட கரு முட்டைகளைப் பயன்படுத்தி கருத்தரிப்பதை விரும்புகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீத உயர்வை இந்த தொழில்நுட்ப முறை கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த உறைய வைத்த கருமுட்டைகளைப் பயன்படுத்தும் முறையில் கிட்டத்தட்ட முழுமையான வெற்றி கிடைப்பதால் பலரும் இதை விரும்பஆரம்பித்துள்ளனர்.

அதேபோல வாடகைத் தாய் முறைக்கும் ஆதரவு பெருகி வருகிறது. 44 சதவீதம் என்ற அளவில் இது உயர்ந்துள்ளது. பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

சமீப காலம் வரை வெளிநாட்டினர்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ஆர்வம் காட்டினர். தற்போது இந்தியர்களும் அதை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.