Home ஆண்கள் இனிமே! எல்லாமே ஜில்,ஜில்., கூல், கூல் தான்., வந்திடுச்சு ஆண்மை அதிகரிக்கும்

இனிமே! எல்லாமே ஜில்,ஜில்., கூல், கூல் தான்., வந்திடுச்சு ஆண்மை அதிகரிக்கும்

93

சூடு ஆண்களுக்கு சுத்தமாக ஆகாது. முக்கியமாக அந்தரங்க பகுதியில். அந்தரங்க பகுதியில் சூடு அதிகரித்தால் விந்தணு ஆரோக்கியம் குறையும். இதனால் விந்தணு எண்ணிக்கை குறைபாடு, விந்தணுவின் நீந்தும் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படலாம். இதற்காக தான் ஆண்கள் இறுக்கமாக உள்ளாடை அல்லது ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றை அணிய வேண்டாம் என்று கூறப்படுகிறது.

ஆண்கள் தந்தை ஆகவேண்டும் என்றால் அந்தரங்க பகுதி மிகுந்த சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்களை மடிகணினியை மடியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்பதற்கும் இதுதான் காரணம். சரி! இதற்கு என்ன தான் தீர்வு? இதோ புதியதாக கண்டுபிடித்துள்ளனர் ஒரு புதிய அண்டர்வேர். இது ஆண்களின் அந்தரங்க பகுதியை சூடாகாமல் குளுகுளுவென வைத்துக் கொள்ளுமாம்.

ஆண்மை! புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அண்டர்வேர் அந்தரங்க பகுதியை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் இதனால், ஆண்களுக்கு ஆண்மை மற்றும் அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

அறிவியல்! இந்த அண்டர்வேர் அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மற்றும் சீரான முறையில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியையும் அதிகரிக்க தூண்டுகிறது. சாதாரண அண்டர்வேர் அணியும் போது சூடு ஏற்படும். ஆனால், இது சூடு ஏற்படுவதை தவிர்த்து, மெல்ல, மெல்ல ஆண்மை / கருவளம் அதிகரிக்க, மேலோங்க உதவுகிறதாம்.

கூல், கூல்! புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அண்டர்வேர் கார்மெண்ட்டில் ரிமூவபில் எர்கோனாமிக் ஃப்ரோசன் எனப்படும் பணிச்சூழலியல் உறைந்த திறப்பு பகுதி இருக்கிறதாம். இது ஆண்களின் அந்தரங்க பகுதியை சூடாகாமல் குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறதாம். மேலும், உஷ்ணம் ஏற்படுத்தாமல் ஒரு இதமான உணர்வை அளிக்குமாம்.

கரு! இந்த புதிய அண்டர்வேர் கண்டுபிடிக்க காரணமாக இருந்தது, இதை தயாரித்தவரின் நண்பர் ஒருவர் சூடு காரணமாக பெரிதும் பாதிப்பிற்குள்ளானாராம். அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே ஆராய்ச்சி செய்து ஆண்களுக்கு பெரிதும் உதவும் இந்த அண்டர்வேர் கண்டுபிடித்துள்ளார் இதை தயாரித்தவர்.

ஸ்நோபால்! இந்த புதிய அண்டர்வேர்க்கு ஸ்நோபால் என்று பெயர் வைத்துள்ளார். இது இயற்கையான ஸ்ட்ரெச் தன்மை கொண்ட காட்டன் பொருட்கள் மற்றும் அதனுள் ரிமூவபில் கூலிங் பேட் கொண்டு தயாரித்துள்ளனர். இந்த உள்ளாடைகளின் விலை ஜோடி 4500 ரூபாய் என்று அமேசான் போன்ற தளங்களில் விற்கப்படுகிறது.

நன்மைகள்! இந்த ஸ்நோபால் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை ஆண்டவர் அணிவதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் என்று, இந்த நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள்., ஆண்மை குறைபாடு (Male infertility) விதைநாள அறுவை (Vasectomies) Varicoceles Hydroceles Spermatoceles விரைமேல் நாள அழற்சி (Epididymitis) ரெட் சாக் சிண்ட்ரோம் (Red sack syndrome) Athletic injuries டெஸ்டோஸ்டிரோன் விரிவாக்கம் (Testosterone enhancement)

டைட்டா வேண்டாம்… உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் ஆண்கள் இறுக்கமான உடை உடுத்த வேண்டாம் என்றும். நாள் முழுக்க இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து உலாவ வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிந்த வரை வெயில் காலங்களில் இறுக்கமான உடைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதே போல, ஆண்கள் இரவு உறங்கும் போது உள்ளாடை உடுத்தி உறங்குவதை காட்டிலும், பாக்ஸர்ஸ் போன்ற கொஞ்சம் லூசான, காத்தோட்டமான உடை அணிந்து உறங்குவது விந்தணு உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிடப்படுகிறது.

சேதம்! இறுக்கமான உடை அணிவது, உறங்கும் போதிலும் டைட்டான உள்ளாடை அணிந்து உறங்குவது போன்றவை மரபணுவில் சேதத்தை ஏற்படுத்துகிறது என ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் நடத்திய ஆய்வில் பாக்ஸர்ஸ் போன்ற கொஞ்சம் லூசான, இலகுவான உடை அணிந்து உறங்கும் ஆண்களுக்கு, இறுக்கமான உடை அணிந்து உறங்கும் ஆண்களுக்கு ஏற்படும் அளவு விந்த / மரபணுவில் அவ்வளவு சேதம் ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விந்தணு திறன்! ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், ஆண்கள் யாரெல்லாம் இறுக்கமான உள்ளாடை அணிந்து உறங்குகிரார்களோ, அவர்கள் மத்தியில் எல்லாம் அந்தரங்க பகுதியில் சூடு அதிகரித்து, அதன் தாக்கமானது விந்தணு உற்பத்தி மற்றும் அதன் தரம், நீந்தும் திறன் போன்றவற்றில் எதிர்வினை தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதனை கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆண்களிடம் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்க்கெல்லாம் ஒரு நல்ல தீர்வளிக்கும் என்ற வகையில் தான் இப்போது ஸ்நோபால் அண்டர்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.