Home குழந்தை நலம் இளம் வயது மகனிடம் செக்ஸ் பற்றிப் பேசுதல்

இளம் வயது மகனிடம் செக்ஸ் பற்றிப் பேசுதல்

203

பெற்றோர் என்ற முறையில் உங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் அறிவைக் கொடுக்கும் பொறுப்பு அதில் சவாலான ஒன்றாக இருக்கும். இந்தியாவில் பெற்றோரும் சரி குழந்தைகளும் சரி, பாலியல் பற்றிப் பேசுவதற்கு மிகவும் தயக்கம் கொண்டிருக்கின்றனர். இதற்கு முந்தைய தலைமுறையோ பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசியதே இல்லை. வீட்டில் பாலியலைப் பற்றிப் பேசுவது தகாத விஷயமாகவும் தடைசெய்யப்பட்ட விஷயமாகவும் இருந்தது. இளம் வயதுப் பிள்ளைகள் பாலியல் பற்றிப் பேசும்போது அவர்கள் கேட்ட சகவாசம் வைத்திருக்கின்றனர், நல்ல பிள்ளைகள் இல்லை என்பது போன்ற விமர்சனங்களை வைத்து அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.

ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள சூழலோ பெருமளவு மாறிவிட்டது. இப்போது இணையத்தின் வசதி எல்லோருக்கும் கிடைப்பதால், குழந்தைகளும் இளம் வயதுப் பிள்ளைகளும் பாலியல் பற்றிய பல தகவல்களையும் ஆபாசப் படைப்புகளையும் எளிதில் அணுக முடிகிறது. நமது பொழுதுபோக்குத் துறையும் திரைப்படங்களும் முன்பை விட இப்போது மிக அதிக பாலியல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. இளம் வயதினரிடையே (9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ளவர்கள்) நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில், ஆண் பிள்ளைகளில் 30% பேரும் பெண் பிள்ளைகளில் 17% பேரும் பாலியல் அனுபம் கொண்டவர்களாக இருந்தனர், 6. 3% ஆண் பிள்ளைகளும் 1. 3% பெண் பிள்ளைகளும் முழுமையான உடலுறவு அனுபவம் கொண்டவர்களாக இருந்தனர் என்று தெரியவந்துள்ளது.

அப்படி இருந்தும், பெற்றோர் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொண்டு குழந்தைகளிடம் பாலியல் பற்றிப் பேச இன்னும் தயங்கிவருகின்றனர். அவர்களே சரியான நேரத்தில் நண்பர்களிடம் இருந்தும் ஊடகங்கள் மூலமாகவும் பாலியல் பற்றித் தெரிந்துகொள்வார்கள் என்று விட்டுவிடுவது தவறான அணுகுமுறையாகும். பெரும்பாலும், சக தோழர்களிடமும் ஊடகங்களிடமும் இருந்து இவர்கள் பெறும் தகவல் தவறானதாகவும் தவறாக வழிநடத்தக்கூடியதாகவுமே இருக்கின்றன.

சிறு வயதிலேயே அதிகமாக அவர்களுக்கு இதைப்பற்றிய தகவலை வழங்கினால், சிறு வயதிலேயே அவர்கள் பாலியல் அனுபவம் பெற ஏதேனும் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்களோ என்ற பயம் பெற்றோர்க்கு உள்ளது. ஆனால், இப்படி பெற்றோர் பாலியல் குறித்து பேசும் பிள்ளைகளே மற்றவர்களை விட, அதிக எச்சரிக்கையாக இருக்கின்றனர், பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தள்ளிப் போடுகின்றனர், குறைவான பாலியல் இணையர்களைக் கொண்டுள்ளனர், கருத்தடை முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. உங்கள் குழந்தைகளிடம் பாலியல், உறவுகள், பிறரிடம் மரியாதையாக நடந்துகொள்வது பற்றியும் சமயம் மற்றும் நல்லது கேட்டது குறித்த சிந்தனைகளை விதைக்கவும் நீங்கள் பாலியல் நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

உங்கள் இளம் வயது மகனிடம் பாலியல் பற்றி நீங்கள் பேச உதவியாக சில குறிப்புகளை வழங்குகிறோம்:

1. சரியான தகவலைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள் (Keep the right information handy)
உங்கள் மகனிடம் என்னென்ன விஷயங்கள் பற்றிப் பேச வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இனப்பெருக்கம் பற்றி மூடநம்பிக்கை கலந்து பேசுவதால் பலன் கிடைக்காது. பாதுகாப்பான பாலியல் பழக்கங்கள், கருத்தடை முறைகள் மற்றும் பால்வினை நோய்களைத் தடுத்தல் ஆகியவை பற்றியும் பேச வேண்டும். என்னென்ன விஷயங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று முன்கூட்டியே பட்டியலிட்டுக்கொள்ளலாம். கண்டிப்பாகப் பேச வேண்டிய சில தலைப்புக்கள்:

ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலங்கள்
பாலியல் ஈர்ப்பு (எதிரினச் சேர்க்கை (ஹெட்டிரோசெக்ஸுவல், ஓரினச்சேர்க்கை (ஹோமோசெக்ஸுவல்), ஈரினச் சேர்க்கை (பைசெக்ஸுவல்), பாலின மாற்றம் (டிரான்ஸ்செக்ஸுவல்) போன்றவை)
சுய இன்பம்
உடலுறவு
மற்றவர்களால் கொடுக்கப்படும் உந்துதல் மற்றும் பாலியல் செயல்களை விட்டு விலகியிருத்தல் அல்லது தள்ளிப்போடுதல்
கர்ப்பம்
கருத்தடை முறைகள்
HIV/AIDS உள்ளிட்ட பால்வினை நோய்கள் (STD)
பாதுகாப்பான உடலுறவு
பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தாக்குதல் போன்றவற்றை எப்படி அறிந்துகொள்வது, தவிர்ப்பது போன்றவை
பாலியல் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதில் ஆல்கஹால் மற்றும் பிற போதைப்பொருள்களின் தாக்கம்
ஆபாசப் படைப்புகள்
2. சிறு வயதிலேயே பேசத் தொடங்குங்கள்
உங்கள் மகன் பாலியல் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் அல்லது கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும், “நீ பெரியவனானதும் இதைப்பற்றிக் கூறுகிறேன்” என்று கூறாதீர்கள். இவற்றைப் பற்றிப் பேச, உங்கள் மகன் பாலியல் செயல்களில் ஈடுபடும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

பாலியல் சார்ந்த செயல்பாடுகள் மகனுக்குத் தொடங்கும் முன்பே பேசுவது சிறப்பு. 10-12 வயதில் பேசுவதே சரியாக இருக்கும். பெரியவனாகும் பருவத்திற்கு சற்று குறைவான வயதில் இருக்கும் உங்கள் மகனால் நீங்கள் கூறும் தகவலைப் புரிந்துகொள்ளவும் முடியும், அதிகம் சங்கடமாகவும் தோன்றாது.

3. சௌகரியமாகப் பேச வேண்டும் (Start Young)
உங்கள் மகனிடம் பேசும்போது வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் உரையாடலின்போது இது போன்ற கேள்விகளைக் கேட்கலாம்:

பள்ளியில் பாலியல் கல்வி கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார்களா?
வகுப்பில் நீங்கள் செக்ஸ் பற்றிப் பேசுவீர்களா?
உங்கள் நண்பர்கள் செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள்?
பாலியல் குறித்துப் பேசும்போது, பெற்றோர் சங்கடப்படுவதாகத் தெரிந்தால், பிள்ளைகளும் தடையின்றிப் பேசமாட்டார்கள். குழைந்து குழைந்து சங்கடப்பட்டுப் பேச வேண்டியதில்லை. செக்ஸ் பற்றிப் பேசும்போது நகைச்சுவை உணர்வோடு பேசுவது இன்னும் நல்லது.

ஏற்கனவே செக்ஸ் பற்றி என்னென்ன தெரியும் என்று கேளுங்கள். பள்ளியில் பாலியல் பாடங்கள் தொடங்கிவிட்டதா என்று கேளுங்கள். அதில் இதுவரை என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள். அந்தத் தலைப்புகளைப் பற்றி முன்பே நீங்கள் படித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் பேசும்போது மகனுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தாலும் நீங்கள் பதிலளிக்க முடியும். பள்ளியை விட நீங்கள் சரியாகக் கற்றுத்தரவில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வரக்கூடாது. நீங்கள் தவறான தகவல்களை வழங்குவதாகவோ அல்லது குழப்புவதாகவோ அவருக்குத் தோன்றக்கூடாது.

4. ஒரே மூச்சாக எல்லாவற்றையும் கூற வேண்டாம் (Appear Comfortable with the Topic)
மகனை உங்கள் அறைக்கு அழைத்து நீண்ட நேரம் பேசலாம். ஆனாலும் ஒரே மூச்சாக நிறையப் பேச வேண்டாம். உங்களைச் சுற்றிலும் கிடைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், உங்கள் சொந்தக் கதைகள், சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்வம் குறையாதபடி பேசுங்கள். உதாரணமாக, திரைப்படத்தில் பாலியல் உணர்வு வெளிப்படும் காட்சி ஒன்று வரும்போது, தொலைக்காட்சியை அணைக்காதீர்கள், சேனலை மாற்றாதீர்கள். அதைப் பற்றி உங்கள் மகனிடம் பேசுங்கள்.

இது போன்ற சின்னச்சின்ன பேச்சு மிக அவசியம். உங்கள் மகனுக்கு தேவையான அறிவை வழங்கவும், மதிக்க வேண்டிய விஷயங்களைப் புரிய வைக்கவும் இது போன்ற பேச்சுக்கள் உதவும். உங்கள் மகன் உங்களை நம்ப வேண்டும், அவருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் கேள்விகள் இருந்தாலும் நீங்கள் பதிலளிப்பீர்கள் தெளிவுபடுத்துவீர்கள் என்று அவர் உணர வேண்டும்.

5. மொழியில் கவனம் தேவை (Appear Comfortable with the Topic)
ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, ஆணுறை (காண்டம்) போன்ற உடலியல்ரீதியான மற்றும் அறிவியல்ரீதியான சரியான சொற்களையே பயன்படுத்துங்கள். தடி, ஓட்டை, ரப்பர் போன்றெல்லாம் சொற்களைப் பயன்படுத்துவதால் தவறான அர்த்தம் மனதில் பதிந்து அவர்கள் புரிந்துகொள்ளும் விஷயங்களில் குழப்பம் ஏற்படலாம். இத்தகைய குழப்பங்களை பின்னாளில் சங்கடத்திற்கு வழிவகுக்கலாம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான தகவலுடன் எளிமையான முறையில் பதில் கூறுங்கள்.

6. கேள்விகள் கேட்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள் (Don’t say everything at once)
பாலியல் குறித்த உங்கள் பேச்சு இரு தரப்பும் பேசுகின்ற, கேள்வி கேட்கின்ற ஆக்கப்பூர்வமான உரையாடலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும், அவர்கள் பேசவும் கேள்வி கேட்கவும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். உங்கள் மகன் பாலியல் தொடர்பாக எதைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று கேளுங்கள். சில சமயம் உங்களுக்கு சரியான பதில் தெரியாத விஷயங்களைப் பற்றியும் அவர் கேள்வி கேட்க வாய்ப்புள்ளது! இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதில் உங்களுக்குத் தெரியவில்லை என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, விரைவில் சரியான தகவலைக் கூறுவதாக வாக்களியுங்கள். ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் பேசுவதில் உங்கள் பிள்ளைகளுக்குத் தயக்கம் இல்லாதபடி பார்த்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கு எப்போது சந்தேகம் எழுந்தாலும் கேள்விகள் தோன்றினாலும் தயக்கமின்றி உங்களிடம் வந்து கேட்பார்கள்.

7. மற்றவர்களைப் பார்த்து தாமும் செய்யலாம் என்று தோன்றும் எண்ணங்களை எப்படி சரியாக நிர்வகிப்பது எனக் கற்றுக்கொடுங்கள் (Use the right language)
பாலியல் உணர்வு என்பது, நம்மீதும் நமது பாலியல் இணையர் மீதும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் மரியாதை செலுத்துவது சம்பந்தப்பட்ட ஓர் உணர்வு என்பதை அவர்களுக்குக் கூறுங்கள். பாலுறவு இல்லாமலும் அதே அன்பு, பாசம் மற்றும் நெருக்கத்தைக் காண்பிக்க பல வழிகள் உள்ளன என்றும் அவை என்னென்ன என்றும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். உடலுறவில் ஈடுபடுவதற்கு ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றியும், தற்போது பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகியிருப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர்களிடம் கூறுங்கள். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவோ, அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதற்காகவோ பாலியல் செயல்களில் ஈடுபட்டாக வேண்டும் என்பதில்லை, சரியான காலமும் சூழ்நிலையும் அமையும் வரை பாலுறவில் இருந்து விலகி இருப்பது ஒன்றும் பிரச்சனையல்ல, அது நன்மை தான் என்ற நம்பிக்கையை அவர்களின் மனதில் ஏற்படுத்துங்கள். உங்கள் அறிவுரைகளையும் மீறி, உங்கள் இளம் வயது மகன் பாலுறவில் ஈடுபட வேண்டும் என்றும் நினைக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. அவர்களிடம் கடுமையாக நடக்க வேண்டாம், குற்றவாளி போலவும் பார்க்க வேண்டாம் (Listen and Encourage questions)
எல்லாவிதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் உங்கள் மகன் கேட்கட்டும், எல்லாவற்றுக்கும் பதிலளியுங்கள். நேர்மையாக இருந்தால் தண்டனை கிடைக்கும் என்று உங்கள் மகனுக்குத் தோன்றும்படி செய்துவிடக்கூடாது. அவர்களின் சில கேள்விகளுக்கோ, தற்செயலாக அவர்கள் செய்யும் சில செயல்கள் பற்றித் தெரியவரும்போதோ மிகுந்த அதிர்ச்சியாவது போல் காட்டிக்கொள்ள வேண்டாம். இளம்பருவம் எனும் காலகட்டத்தில் தான் எண்ணற்ற சிந்தனைகளும், பாலியல் குறித்த தீவிரமான தேடலும் நடைபெறும். இந்தக் காலகட்டம் பிள்ளைகளுக்கு மிகுந்த குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம். உங்கள் மகனின் அறையில் ஆபாசப் படங்கள் இருப்பதை நீங்கள் கண்டறியலாம் அல்லது அவர் சுய இன்பம் செய்துகொண்டிருக்கும்போது தற்செயலாக நீங்கள் பார்க்க நேரிடலாம். இதெல்லாம் பெரிய குற்றம் என்பது போலவும் அசிங்கப்பட வேண்டிய விஷயம் என்பது போலவும் நடந்துகொள்ள வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ உண்டாகி மனதில் பதிந்தால், அது அவர்களின் எதிர்கால பாலியல் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் பாதிக்கலாம்.

9. பாலியல் கல்வி சார்ந்த தகவல்களை வழங்குங்கள் (Educate about strategies to manage peer pressure)
பாலியல் சம்பந்தப்பட்ட தலைப்புகளில், அச்சு வடிவிலும் CD, DVD வடிவிலும் அந்தந்த வயதினருக்கு ஏற்ற பல்வேறு தகவல் தொகுப்புகள் கிடைக்கின்றன. நீங்கள் பேசுவதோடு மட்டுமின்றி, இது போன்ற புத்தகம், DVD தகவல் தொகுப்புகள் போன்றவற்றையும் உங்கள் மகனுக்குக் கொடுக்கலாம். அதுவும் அவர்கள் மேலும் விரிவாக பாலியல் பற்றித் தெரிந்துகொள்ள உதவும். இதுபோன்ற கல்வித் தகவல் தொகுப்புகளை கூடுதல் அம்சமாகவே பயன்படுத்த வேண்டும், உங்கள் மகனுடன் நீங்கள் பேசுவதே அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.