இணையதளங்கள், செல்போன், ஸ்மார்ட் போன்கள் மூலம் பாலியல் ரீதியான படங்கள், கட்டுரைகளை படிக்கவும், நண்பர்களிடமும் பரிமாறிக்கொள்வது சர்வ சாதாரணம் என்று இன்றைய இளைஞர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ப்ளைமௌத் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இங்கிலாந்தில் இணைய தளங்களை பார்வையிட வந்த 16 வயது முதல் 24 வயது வரை உடைய 850க்கும் மேற்பட்ட இளம் வயதினர் பங்கேற்றனர்.
ஆய்வில் பங்கேற்ற 80 சதவிகிதம் பேர் தங்களின் ஸ்மார்ட் போன், வெப்சைட் போன்றவைகளை செக்ஸ்க்காகவும், போர்னோ படங்களை பார்க்கவும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் செக்ஸ் தொடர்புக்காக ஆட்களை அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளனர்.
இணையதளம், செல்போன் போன்றவைகளை இன்றைய இளையதலைமுறையினர் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துகின்றனரோ இல்லையோ பாலியல் ரீதியான செயல்களுக்கு பயன்படுத்திவருகின்றனர் என்று ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.