உறவு முறைகள்:துன்பம் என்றும் ஆணுக்கல்ல. அது அன்றும் இன்றும் பெண்களுக்கே! . பெண்ணாக பிறந்த எல்லோருமே தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு அழும் பேதைகள்தானே!
* பெண்களின் குணத்தில் நிறைய மாறுதல்கள் உண்டு. அடங்காபிடாரி, அதிகபிரசங்கி, ராட்சசி, பிசாசு என்ற பட்டங்களை சுமந்து கொண்டு வாழும் பெண்களும் இருக்கிறார்கள். பிறருடன் ஒத்துப் போகாமல் கணவனை மதிக்காமல் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல், பொறாமையோடு உயர்ந்த மனப்பான்மையோடு (சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) ஆண்களை மட்டம் தட்டி மகிழும் பெண்களும் இருக்கிறார்கள். என்னோட ரசனைகளுக்கு என் ஹஸ்பண்ட் ஒத்து வரவில்லை என்று உதாசீனப்படுத்தும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
* ஆனால், மாதவிடாய் என்ற உடல் ரீதியான மாற்றத்தில் பெண் எந்தெந்த விதத்தில் பாதிக்கப்படுகிறாள் என்ற கருத்துக்கான விடைகளை பார்ப்போம். நிறைய பேர் மாதவிடாய் பருவத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? அந்த சமயத்தில் எங்களது கணவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
* அவர்களது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக மட்டும் நினைக்கிறார்கள். நாங்கள் படும் வேதனையை புரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள். அதை நினைத்து எங்களை பல சமயங்களில் பழி வாங்குகிறார்கள், துன்புறுத்துகிறார்கள். கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார்கள் என்று நிறைய பேர் வருந்துகிறார்கள்.
பொதுவாக மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் மாறுபாடுகள்!
1. நரம்பு தளர்ச்சி
2. சோர்வு
3. மனச்சோர்வு, இனம்புரியாத எரிச்சல், பயம், கோபம், வெறுப்பு.
* இதுமட்டும் அல்லாமல் குடும்ப பெண்களுக்கு குடும்ப கவலை, குழந்தைகளை பராமரிப்பதில், அன்றாட வீட்டு வேலைகள், கணவனுக்கு பணிவிடை, சமையல் வேலை, மாமியார் அல்லது உறவினர் கொடுக்கும் தலைவலி. ஆக, இத்தனை சுமைகளுக்கு நடுவே மாதவிடாய் வேதனை.
* அந்த உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு மத்தியில் மாதவிடாய் என்று தெரிந்தும் மனைவியை உறவுக்கு அழைக்கும் ஆண்களை மிருகத்துக்கு ஒப்பிடலாம்.
* தன் மனைவி வேதனை என்ற புதைக்குழியில் சிக்கி தவிக்கிறாள் என்று அறிந்தும் அவளது மனதுக்கு, உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் தன் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக நினைப்பது தவறு! தப்பு!
* மாதவிடாய் பருவத்தின்போது அதிகமான ரத்தப்போக்கு, வயிற்றுவலி, சோர்வு இருக்கும். எனவே, அந்த சமயத்தில் வெறுப்புணர்ச்சியே மேலோங்கி நிற்கும். அந்த உணர்ச்சியை பெண்கள் வெளிக்காட்டுவார்கள்.
* கோபம், எரிச்சல், எதையோ பறிகொடுத்தது போல விரக்தி உணர்வு இருக்கும். அதை வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூட தயக்கமும், வெட்கமும் வரும். உடல் ரீதியாக கலந்து விட்ட அந்த மாற்றத்தை எப்படி மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் போட்டோந்து கொள்ள முடியும்? அவர்களுக்கு எப்படி போட்டோய வைக்க முடியும்?
ஒவ்வொரு மனைவியும், தனது கணவனுக்கு கூச்சபடாமல் தனது உடல் ரீதியான பிரச்சனைகளை மனம் திறந்து சொல்ல வேண்டும். அந்த சமயத்தில், தனக்கு வரும் வெறுப்பு, கோபம், தளர்ச்சி போன்ற உணர்ச்சிகளை எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் அவர்களது செக்ஸ் தொந்தரவில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும். உங்களை காத்துக் கொள்ளவும் முடியும்.