சந்தேகம், உறவில் உருவானால் கரையான் போல குடும்பத்தை அழித்துவிடும். சந்தேகம் என்பது உறவை கொல்லும் பெரும் கருவி. இதை உறவில் ஊடுருவ செய்தால் பிரிவு எனும் முடிவை தான் நாம் சந்திக்க நேரிடும். பலரது வாழ்வில் சந்தேகம் ஏற்பட காரணமாக இருப்பது பணமும், அழகும் தான்.
“தன்னை விட மனைவி அழகாக இருக்கிறாள், வேறு நபருடன் சென்றுவிடுவாரோ?”, “தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள்…, தன்னை கீழ்தனமாக நினைத்துவிடுவாளோ?” என ஆண்களும்., பெண்களும் இந்த இரண்டு காரணிகளால் தான் அதிகம் சந்தேகம் கொள்கிறார்கள். சந்தேகத்தினால் உறவில் ஒருவர் செய்யும் இந்த தவறுகளால் கண்டிப்பாக பெரும் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
தங்கள் துணையை அதிகம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவர்கள், அவர்கள் வெளியே செல்வதை அறிவது, தொலைபேசியை ஆராய்வது, அவர்களது கைப்பை மற்றும் பர்ஸ், வங்கி கணக்குகளை திருட்டுத்தனமாக அறிய முயல்வார்கள்.
இது போன்ற செயல்களால் சந்தேக குணம் கொண்டுள்ள துணை மீதான ஆசை, விருப்பம் குறைந்துவிடும். உறவில் மன அழுத்தம் அதிகரிக்கும். கடைசியாக பிரிவு ஒன்று தான் முடிவு என்ற நிலைக்கு கூட செல்லலாம்.
பல சந்தேகங்கள் கானல் நீராக தான் இருக்கும். அவர்கள் மனதில் எழும் ஒரு ஹெலசினேஷன் என்று கூட கூறலாம். நடக்காத ஒன்றை, நடந்திருந்தால், நடந்தால் என்ன ஆகும் என்றபடியே சுழன்று கொண்டிருப்பார்கள்.
நடக்காத தவறுக்கு தடயங்கள் தேடி அலைவார்கள். என்ன நடந்தாலும், அதை தங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு செல்ஃப் ட்ரிகர் ஆவார்கள். இதனால், அவர்களுக்கு மனநல கோளாறுகள் கூட ஏற்படலாம்