Home சூடான செய்திகள் நல்ல கணவன் மனைவி உறவுமுறை தொடர்புகள்

நல்ல கணவன் மனைவி உறவுமுறை தொடர்புகள்

154

கணவன் மனைவி உறவு:அனைவருக்கும் தனது மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அந்த நல்ல கணவனுக்கான அறிகுறிகள் என்னென்ன, பண்புகள், குணாதிசயங்கள் என்னென்ன என்பதை தான் மறந்துவிடுவார்கள்.இதற்கான அளவுகோலை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்துக் கொள்கின்றனர்.

சிலர் சைட் அடிப்பதில் என்ன தவறு என்பார்கள், 

சிலர் எப்போதோ ஒரு நாள் நண்பர்களுடன் வெளியே செல்வதால் என்ன ஆகிவிட போகிறது என்பார்கள், சிலர் ரெண்டு ரவுண்டு தான, இது எல்லாம் ஒரு தப்பா என்பார்கள். இது தான் சரி, இது தான் தவறு என்று ஏதுமில்லை. உண்மையில் உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்ப்பதில் 75% நிறைவேற்றிவிட்டாலே நீங்கள் ஒரு நல்ல கணவர் தான்…… 

பேசுங்க!வேலை, பிரஷர், நண்பர்கள், உறவுகள் என எதுவாக இருப்பினும், உங்கள் மனைவியுடன் தினமும் செலவிடும் நேரத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர்களில் இருந்தாலும் கால் செய்தாவது பேச மறக்க வேண்டாம். 

கிளுகிளு, நோ கடுகடு… எப்போதும் மகிழ்விக்கும் விதமாக நடந்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை கிடுகிடு என முகத்தை கடுகு வெடிப்பது போல வைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் இருப்பை துணை எப்போதும் நெஞ்சுக்குள் வைத்துக் கொள்ளும் படி நீங்கள் நடந்துக் கொள்ள வேண்டும். 

எதிர்பார்ப்பு! சமையல், அரவணைப்பு, பாசம், அன்பு, தாம்பத்தியம் என அனைத்திலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம். இவை யாவும் கடுகளவு குறைந்தாலும் மனதில் பெரியளவில் பாதிப்பை உண்டாக்கும். 

வேலை கோபம்! வேலையில் இருக்கும் கோபத்தை, காண்பிக்க ஆளில்லை என்பதற்காக வீட்டில் வந்து காட்ட வேண்டாம். எப்போதாவது என்றால் பரவாயில்லை. எப்போதுமே என்பது மிகப்பெரிய தவறு. 

புன்னகை அளியுங்கள்! உங்கள் மனைவியின் இதழிகளில் புன்னகை தவழ நீங்கள் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். சின்ன, சின்ன விஷயத்திலும் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும், நீ எப்போதும் ஸ்பெஷல் தான் என்பது போல சிறுசிறு வார்த்தைகளில் அவர்களை புன்னகைக்க வையுங்கள். 

சுத்தம் பண்ணுங்க!உங்கள் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் நீங்களாக உங்கள் வீட்டை சுத்தம் செய்து வையுங்கள். கண்டிப்பாக இதைவிட மனைவிக்கு ஒரு கணவன் பெரிய உதவியை செய்துவிட முடியாது. 

பேராண்மை!எந்தவொரு தருணத்திலும் உங்கள் மனைவியை பாதுகாப்பின்மையாக உணர வைத்துவிடாதீர்கள். இது ஒரு ஆணாக உங்களுக்கு மிகப்பெரிய தோல்வியாகும். 

குறைத்து மதிப்பிட வேண்டாம்! உங்கள் மனைவியின் திறமை மற்றும் வேலையை குறைத்து மதிப்பிட வேண்டாம். 

காதலுடன் காதையும் கொடுங்க…காதலை கொடுப்பது போல, அவர்கள் பேசும் போது கொஞ்சம் காதையும் கொடுங்கள். அப்போது தான் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது முழுமையாக அறிந்துக் கொள்ள முடியும். 

தாம்பத்தியம்!உங்கள் மனைவிக்கு என்ன பிடிக்கும், உங்கள் மனைவி எதை உங்களிடம் விரும்புகிறார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 

வார்த்தை பிரயோகம்!கோபமாக இருப்பினும், நீங்கள் பிரயோகப்படுத்தும் வார்த்தையில் கவனமாக இருங்கள். நீங்கள் கோபத்திலும் பேசினாலும், அது அவரை எப்படி மனதளவில் பாதிக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். 

பழையதை கிளற வேண்டாம்!இன்று நடந்த தவறுகளுக்கு, என்றோ நடந்த விஷயத்தை கிளறி நோகடிக்க வேண்டாம். 

ஒப்பீடு! பொதுவாகவே பெண்களுக்கு தங்களை வேறு நபருடன் ஒப்பீடு செய்வதை விரும்பமாட்டார்கள். முக்கியமாக மனைவியை வேறு நபர்களின் மனைவியோடு ஒப்பிடுவது நீங்களே உங்களுக்கு ஆப்பு வைத்துக் கொள்வதற்கு சமம். 

விமர்சனம்! சிறிதளவு உப்பு குறைந்தால் நீங்களாக உப்பு சேர்த்து சாப்பிட பழகுங்கள். அதற்கெல்லாம் இதெல்லாம் ஒரு சாப்பாடா என்பது போல கத்த வேண்டாம்! 

ஏமாற்றுதல்! உங்கள் மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்கும் முன், அதை அவர் செய்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் தேவையில்லாமல் பொய்கள் கூறுவதை தவிர்த்துவிடுங்கள். 

மதிப்பு! உங்கள் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்திற்கு உங்கள் குடும்பத்தாருக்கு கொடுக்கும் அதே மதிப்பை அளியுங்கள். வேறுபடுத்தி காண வேண்டாம். இது தேவையில்லாத சண்டைகளை உருவாக்கும்…