பொதுவாகவே கட்டில் சார்ந்த விஷயங்களில் ஆண்கள் மீது பெண்கள் குற்றச்சாட்டாக கூறுவது, உடலுறவுக்கு பின் உடனே உறங்கிவிடுகிறார்கள். கொஞ்ச நேரம் கூட கொஞ்சுவதோ, குலாவுவதோ இல்லை என்பதுதான்.
“ஏம்பா, இதெல்லா அவங்க வெளியவா சொல்ல முடியும், அப்படியும் சொன்னாலும் நல்லாவா இருக்கும்…”
உடலுறவுக்கு பின் சில ஆண்களுக்கு குலாவுதல் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால், கருத்தரிக்க விரும்புவோர், உடலுறவுக்கு பிறகு கொஞ்சி குலாவுதல் அவசியம். இது தான் பெரும்பாலும் கருத்தரிக்க உதவுகிறது.
இனி, உடலுறவிற்கு பின் கொஞ்சி குலாவுவது கருத்தரிக்க எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்…
அறிவியல் ரீதியான உண்மை
கருத்தரிக்க விரும்புவோர், உடலுறவுக்கு பிறகு கொஞ்சி குலாவுதல் அவசியம் என்று அறிவியல் ரீதியாகவே மெய்பிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு உச்சம்
உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு தான் பெண்கள் அதிகமான உச்சம் உணர்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆண்கள் செய்யும் தவறு
பெரும்பாலும் ஆண்கள், விந்தணு வெளிப்பட்டவுடன், போதுமடா சாமி என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், உடலுறவிற்கு பிறகு தான் பெண்கள் உச்சமடைகிறார்கள். அப்போது நீங்கள் உங்கள் துணையோடு கொஞ்சி குலாவுவது அவசியம்.
ஆக்ஸிடாஸின் உச்சம்
உணர்ந்த பிறகு கொஞ்சி குலாவுதலில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆக்ஸிடாஸின் எனும் ஹார்மோன் சுரக்கிறது, இது கருத்தரிக்க மிகவும் உதவுகிறது.
பெண்களின் இன்பம்
உடலுறவுக்கு பிறகு கொஞ்சி குலாவுவது தான் பெண்களை முழுமையாக இன்பமடைய உதவுகிறது. இது அவர்களை, அனைத்து வகையிலும் அவர்களது துணையோடு சௌகரியமாக உணர வைக்கிறது.
இனி…
எனவே, கருத்தரிக்க விரும்பும் தம்பதியர், உடலுறவுக்கு பிறகு, கட்டாயம் உங்கள் துணையோடு கொஞ்சி குலாவுங்கள். விரைவில் குவா, குவா.. சத்தம் கேட்கும்.