Home சூடான செய்திகள் டென்சன் குறைய துணைவரை க‌ட்டி‌பிடிங்க…

டென்சன் குறைய துணைவரை க‌ட்டி‌பிடிங்க…

19

காதல் இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை என்பது போல் டென்சன் இல்லாத மனிதர்களும் இல்லாமல் இல்லை. அப்படி டென்சன் அதிகம் அடைவதால் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌ம். அவர்கள் ஏன் கையில் வெ‌‌ண்ணெய்யை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைய வேண்டும்? என்ன புரியவில்லையா? ஆமாம், டென்சன் குறைய சிகிச்சை உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது.

ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்தில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் டென்சன் குறையு‌ம் எ‌ன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.

அதில் எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அவர்கள் வாரத்தில் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபட்டவர்களுக்கு டென்சன் குறைந்திருக்கிறது. இது வெறும் ஆய்வு மட்டுமல்ல, அறிவியல் ரீதியான உண்மை என்று ஆய்வாளர்கள் விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கி பார்த்தால், டென்சன் பெருமளவில் குறைந்துள்ளது என்றும், மேலும் டென்சன் மட்டுமே குறைய வேண்டும் என்று நினைத்து கட்டிப்பிடித்தால், அது ரொம்ப வேஸ்ட். இருவரும் முழு மனதோடு, அன்பை வெளிகாட்டி இணைந்தால்தான், உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம் என்றும் கூறுகின்றனர்.