Home சூடான செய்திகள் கட்டிப்பிடிப்பது என்பது காமமா? இப்படி கட்டிப்பிடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்..?

கட்டிப்பிடிப்பது என்பது காமமா? இப்படி கட்டிப்பிடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்..?

211

சூடான செய்திகள்:கட்டிப்பிடி வைத்தியம்” பற்றி நம்ம எல்லோருக்கும் கற்று கொடுத்தது வசூல் ராஜா படம் தான். “கட்டிப்பிடி” என்கிற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பாட்டும், அந்த பாட்டில் நடித்த நடிகையும் மிக பிரபலமாக ஆகிவிட்டார். இப்படி பலவித விஷயங்கள் இந்த கட்டிபிடித்தலில் சிறப்பம்சமாக உள்ளது.

ஆனால் நமது ஊரில் நம் அப்பாவை கட்டிப்பிடித்தால் கூட மிக தவறான ஒன்றாக பார்க்கும் கண்ணோட்டம் சில நூற்றாண்டாக திரிந்து வருகிறது. கட்டிபிடித்தல் அவ்வளவு மோசமான ஒன்றா..? என்று கேட்டால் “இல்லை” என்பதே பதில். கட்டிப்பிடித்தலில் காமம் இருப்பதில்லை. காமம் சேர்ந்த கட்டிபிடித்தல் நமது துணையுடனோ அல்லது காதலியுடனோ ஏற்படலாம்.

ஆனால், நாம் கட்டிப்பிடிக்கும் எல்லோர் மீதும் காமம் வந்து விடுவதில்லை. காமம் வேறு கட்டிபிடித்தல் வேறு என்பதை நாம் நன்கு உணர வேண்டும். சரி, நாம் நமது காதலி அல்லது மனைவியை தினமும் கட்டிப்பிடித்தால் என்னென்ன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதற்கான தெளிவான பதில் இதோ…

அணைப்பு
நமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.

தாம்பத்தியத்திற்கு தொடக்க புள்ளி
தினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. தாம்பத்தியத்திற்கு இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.

எதிர்ப்பு சக்தி
தினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

ஆண்களே முதன்மை
கட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று..! இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.