Home சூடான செய்திகள் கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் வசியம்…

கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் வசியம்…

58

அவன், அவளை கட்டி தழுவினான். அடடே, ஆச்சரியக்குறி என போடாவிட்டாலும், ஹார்மோன்கள் போட்டுவிடும் என்பதே உண்மை. ஆம், கட்டிப்பிடி தழுவல் என்பது அன்பை பரிமாறிக்கொள்ளும் ஓர் அழகிய உணர்வு. அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கணவன் மனைவிக்கு வருவதனால் என்ன நன்மை என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

இறுக்கப்படும் தனிமை:
பொதுவாக மனதில் ஏற்படும் சங்கடத்தை மனைவி என்பவள்., கணவனை தவிர மற்றவர்களிடம் சொல்ல முன்வருவதில்லை. கணவனும் இதேபோல் தான். அலுவலகத்து பிரச்சனைகளை உங்களிடம் சொல்லாமல் மனதினுள்ளே வைத்திருக்க கூடும். அப்போது, நீங்களாக அவரை கட்டிப்பிடித்து, என்ன பிரச்சனை என மட்டும் கேட்காமல், “எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் இருக்கிறேன்…” என கூறி பாருங்களேன். அடுத்த முறை அலுவலகத்திலே பிரச்சனை என்றாலும் உங்களிடம் தான் முதலில் கூற முன் வருவார்.

இதனால், தனிமை என்னும் உணர்வு மறைய, நீங்கள் அவருடன் இருக்கிறீர்கள் என்னும் உணர்வு உண்டாகும். நாளை, உங்கள் தனிமையும் மறைந்து, அவரால் இறுக்க அணைத்து என்ன என உங்கள் பிரச்சனையை கேட்டிடக்கூடும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:
இறுக்க கட்டி அணைப்பதால் உங்கள் இருவரிடமும் இருக்கும் சீரற்ற இரத்த அழுத்தம் சீராக செயல்பட தொடங்குகிறது.

டாக்டர்கள் தேவையில்லை:
கணவனும், மனைவியும் கட்டி அணைப்பதால் தைமஸ் சுரப்பி செயல்படுவதன் மூலம், வெள்ளை இரத்த அணுக்கள் உருவாக தொடங்குகிறது. இதனால், நோய்களிலிருந்தும் நம்மால் தப்ப முடிகிறது.

கட்டிப்பிடிப்பதால் கட்டிலின் செயல்பாடு:
கணவன், மனைவி தினமும் கட்டிபிடித்துக்கொள்ள இதனால் இருவருக்குள்ளும் இருக்கும் மன இறுக்கம் குறைந்து நல்லதோர் தூக்கத்தையும் தருகிறது.

நல்லதோர் உடலுறவு:

கணவனும் மனைவியும் முதலில் கட்டிப்பிடிப்பதால் முத்த நிலை தொடங்குகிறது. இந்த நிலையின் முடிவில் ஆரோக்கியமான உடலுறவும் ஆரம்பம் ஆகிறது.

பிடித்தவற்றையும் சேர்த்து பிடித்தல்:
கணவனும், மனைவியும் கட்டி தழுவும் போது பிடித்தவற்றை மனம்விட்டு பேசி மகிழலாம். இதனால், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர் மறக்காமல் இருப்பார். நீங்களும் அவருடைய ஆசையை தெரிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

கட்டிப்பிடி வைத்தியம் என்பது இரு இதயம் இணைய புது வாழ்வை தொடங்குவதே ஆகும்.

அந்த வாழ்வில்.,

புரிதலுணர்வு இருக்கும், அன்பு இருக்கும், ஆசை இருக்கும், ஆசையுடன் சேர்ந்த அரவணைப்பு இருக்கும், தேடல் இருக்கும், தேடல் பின்னணியில் இரு கைக்கோர்த்த ஓடல் இருக்கும், ஓடலுடன் சேர்ந்த ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும். நம்பிக்கை இருக்கும், நிறைவேற்ற வேண்டிய இரு உள்ள ஆசை பல இருக்கும். இருபத்தைந்து வயதிலும் சரி…அறுபத்தைந்து வயதிலும் சரி…

கட்டி அணைத்தால்.,

கல்லும் கரையும்

உம் வியர்வை துளி பட…

கணவன் மனம் மட்டும்

கரையாமல் இருக்குமா என்ன?