Home உறவு-காதல் உங்கள் கணவர் உங்களிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள்..!

உங்கள் கணவர் உங்களிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள்..!

57

தம்பதியர் திருமணத்திற்கு முன்னரோ அல்லது திருமணம் முடிந்த பின்னரோ பல கதைகள் பேசி, சிறிது மகிழ்ந்திருப்பர்; ஆனால், ஒருவர் மீதான மற்றோருவரின் அந்த மோக காலம் முடிந்த பின், இருவரும் தத்தம் வேலைகளை செய்யத்தொடங்கி, பேசும் சிறிது மகிழும் நேரமே குறுகி காணாமல் போகத் தொடங்கிவிடும். ஆனால், இது நல்ல நடைமுறையல்ல தோழியரே!

நீங்களும் உங்கள் கணவரும் என்றும் இருப்பதாய் ஒருவருக்கொருவர் பிணைப்புடன் இருக்க வேண்டும்; இவ்வாறு இருக்க நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். அப்படி பேசினால் மட்டுமே ஒருவர் மீதான ஒருவரது காதல் மேலும் மேலும் வளரும்.!

மனைவியரே! உங்கள் கணவர் உங்களைப்பற்றி எண்ணும், உம்மிடம் கூற விரும்பும் சில விஷயங்களை பற்றி இங்கு படித்தறியுங்கள்..!

1. நான் உன்னை காதலிக்கிறேன்..
உங்கள் கணவர், என் வாழ்க்கையில் இணைந்து என் வாழ்க்கையாகிவிட்ட, என் வாழ்க்கைத்துணையே! நான் உன்னை காதலிக்கிறேன்..! மிகவும் காதலிக்கிறேன்! என்பதை சொல்லாது துடிக்கிறார். உங்களுக்கு இதில் சந்தேகம் எனில் உங்கள் கணவரிடம் இதுகுறித்து கேட்டுப்பாருங்களேன்!

2. உன் கனவு..
என் அன்பு மனைவியே! நீ உந்தன் கனவுகளை நனவாக்கி, இலக்குகளை எட்டி, வெற்றியின் உச்சத்தை எட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்.. – உங்கள் அன்புக்கணவரின் ஆசை.!

3. உன் வெற்றி – என் மகிழ்ச்சி
நீ உந்தன் கனவுகளை விரட்டிச் சென்று, அதில் வெற்றிக்கொடியை நாட்டி, எனக்கு அளப்பரிய ஆனந்தத்தை தர வேண்டுகிறேன் என் ஆசைக் காதலியே!

4. வீடு – இல்லம்..
நீ தான் இந்த கட்டடத்தை இல்லம் எனும் கோவிலாக்கி, குடும்பத்தை பாசத்தால் இணைத்து, ஆனந்தம் நிறைந்த இல்லமாக மாற்றினாய்! என் அன்பு மனைவியே!

5. உன் பெற்றோர் இல்லம்..
நீ எப்பொழுதெல்லாம் உன் பெற்றோர் வீட்டிற்கு என்னை விட்டு பிரிந்து செல்கிறாயோ, அப்பொழுதெல்லாம் தனித்து விடப்பட்ட அநாதையாய் உணர்கிறேன்! என் ஆருயிர் மனைவியே!