இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். ஆனால், நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
பெரும்பாலும், ஒருவரிடம், ஒருவர் எதையும் மறைக்காமல் உண்மையாக இருந்தாலே இல்லறம் என்றும் சிறந்து விளங்கும். இங்கு தவறுகள் நடக்கும் போது தான் சந்தேகம் எழுந்து, ஈகோ வலுத்து, இல்லறம் சிதைய ஆரம்பித்துவிடுகிறது. இனி, இல்லறத்தில் தம்பதிகள் செய்யும் ஐந்து தவறுகள் பற்றி பார்க்கலாம்…
தவறு #1
உடலுறவு என்பது வெறும் சுகம் அல்ல. இது உங்கள் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் கருவியும் கூட, எனவே, உங்கள் துணை உறவிற்கு அழைக்கும் போது, வேண்டாம் என மறுக்க வேண்டும்.
தவறு #1
ஒருவேளை உங்கள் உடல்நிலை, மனநிலை சரியில்லாத காரணமாக இருந்தால், அதை சரியாக எடுத்துக் கூறுங்கள். நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது, உங்கள் இல்லறத்தில் விரிசல் உண்டாக காரணியாக இருக்கலாம்.
தவறு #2
விட்டுக் கொடுத்து போவது தான் இல்லறத்தை எப்போதும் சிறக்க வைக்கும். ஆனால், இருவரும் விட்டுக் கொடுத்து போக வேண்டும். ஒருவர் மட்டுமே வாழ்நாள் முழுதும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பது ஆதிக்கம் செலுத்துதல் ஆகும்.
தவறு #2
எந்த ஒரு உறவில் ஒருவரது ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறதோ, அந்த உறவில் மெய் இன்பம் காண்பது அரிது ஆகிவிடும். எனவே, வீண் ஈகோ மற்றும் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
தவறு #3
தம்பதி இருவரும் தினமும் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒருவரிடம் ஒருவர் துளியும் மறைக்காமல் கூற வேண்டும். பல சமயங்களில் சந்தேகம் எழுவதே, நீங்கள் செய்யும் வேலை அல்லது காரியங்கள் குறித்து நீங்கள் மறைக்க நினைப்பதால் தான்.
தவறு #3
ஆரம்பத்தில் கண்டும், காணாதது போல இருந்தாலும், ஓர் தருணத்தில் பூகம்பம் போல சண்டை வெடிக்க முக்கிய காரணியாக இருக்கும். மேலும், இதனால், இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வெடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
தவறு #3
ஆரம்பத்தில் கண்டும், காணாதது போல இருந்தாலும், ஓர் தருணத்தில் பூகம்பம் போல சண்டை வெடிக்க முக்கிய காரணியாக இருக்கும். மேலும், இதனால், இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வெடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
தவறு #4
உணர்வு சமநிலை இருக்க வேண்டும். உங்கள் இருவரில் யாருக்கு காயம் பட்டாலும் இருவரும் வருந்த வேண்டும். யார் ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தாலும், இருவரும் இன்பம் கொள்ள வேண்டும். உன் இன்பதுன்பங்கள் குறித்து நான் வருத்தப்பட முடியாது என்பது இல்லறமே கிடையாது.
தவறு #4
உணர்வு ரீதியாக தம்பதிகள் சமநிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது படுக்கையறையில் கொஞ்சுதல் முதற்கொண்டு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தவறு #5
துரோகம், ஏமாற்ற நினைப்பது. துளி அளவு உங்கள் துணைக்கு துரோகம் எண்ண நினைக்கும் முன்பு, அதே துரோகத்தை உங்கள் துணை உங்களுக்கு செய்தால் உங்களது மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள் என்ன, நீங்கள் எவ்வளவு வருந்துவீர்கள் என்பது குறித்து நினைவில் கொள்ளங்கள்.
தவறு #5
ஒருவேளை ஏதேனும் தவறு செய்திருந்தாலும் கூட ஒப்புக்கொள்ளுங்கள். மன்னிப்பு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். அதற்காக தவறுகள் செய்துக் கொண்டே இருக்க கூடாது.