அந்தரங்க கேள்விபதில்:பாலுணர்வு உந்துதல் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்குமா? அல்லது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடுமா?
உண்மைதான். கலவி வீரியம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவில்தான் இருக்கும்.
தனி ஒருவருக்குக் கூட சூழ்நிலை, உடல் ஆரோக்கியம், மனநிலை, துணைவரது குணாதிசயம், புறவாழ்வில் நேர்பவை, பிறரது துாண்டுதல், சுய அபிப்ராயம் மாதிரியான பலப்பல விஷயங்களைப் பொறுத்து வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அளவிலான வீரியம் ஏற்படுகிறது.
அதனால்தான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர், மலரினும் மெல்லியது காமம் என்று!\
————————–
மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ஆணுக்கு வலி அதிகமாக இருக்கும் என்று ஒரு நண்பன் சொல்கிறான். அது உண்மையா?
மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சத்து குறைவாகி விடுவதால் ஜனனக் குழாயின் வழவழப்பு குறைந்து போகும் வாய்ப்பு உண்டு. போதுமான வழவழப்பற்ற குழாயினுள் நுழையும்போது ஆணின் உறுப்பு உராய்வினால் வலி உணரவும் கூடும்.
இதைத் தவிர்க்க மருந்துக் கடைகளில் விற்கும் வழவழப்பான ஜெல்களை வாங்கிப் பயன்படுத்தலாம். சமையல் எண்ணெய், கைமேல் இருக்கும் வெண்ணெய் என்பது உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?
—————————————–
எனக்கு வயது 28. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அயனாவரத்தில் என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பெண். கல்லுாரி மாணவிதான். என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, கஷ்டமாக இருக்கிறது. “அப்படிக் கூப்பிடாதே“ என்று கூறிவிட்டால், கோபித்துக் கொண்டு, பேசுவதை நிறுத்திவிடுவாளோ என்றும் தயக்கமாக இருக்கிறது. நான் அவளை விரும்புகிறேன். என்னை “அண்ணா“ என்று அழைக்கும் அவளிடம் நான் “ ஐ லவ் யூ“ சொல்லலாமா? சரிப்பட்டு வருமா?
“அண்ணா“ என்று கூப்பிடுவதால் நீங்கள் அவளுக்கு ஒரிஜினல் அண்ணன் ஆகிவிடமுடியாதே! நீங்கள் அவளது ரத்த சம்பந்தமானவராக இல்லாதவரை எல்லாமே சரிப்படும்தான். ஆனால் உடன்பிறவாத உங்களை, அந்தப் பெண் ஏன் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக “அண்ணா“ போடுகிறாள்?
சில பெண்கள், “அவன் தப்பா நெனச்சிப்பான்“ என்று அண்ணா போடுவார்கள். சிலர், வீட்டில் உதை விழுமே என்று பழக்கதோஷத்தில், பார்க்கும் இளவயது ஆண்களையெல்லாம் “அண்ணா“ போட்டு வைப்பார்கள். இன்னும் சிலர், “எனக்குத் தப்பான எண்ணம்னு யாரும் நினைச்சிடக்கூடாதே“ என்று ஒரு தற்காப்புக்காக “அண்ணா“ போடுவார்கள். இதையெல்லாம் விட, “அத்தான்“னு கூப்பிட வேற ஆளு இருக்கு. உன் லெவலுக்கு அண்ணாவே போதும் என்கிற எண்ணத்தில் “அண்ணா“ என்பவர்கள்தான் அதிகம்.
உங்கள் ஆள் இதில் எந்த வகை என்பதை குறிப்பறியுங்கள். வெறும் பழக்கதோஷத்தில்தான் அண்ணா போடுகிறாள் என்றால், ஒரு வேளை சரிப்படலாம். ஆனால், “கடலின் ஆழத்தைக் கூட அறிந்து கொள்ளலாம். ஒரு பெண்ணின் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது“ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்படியோ, உங்கள் முயற்சி வெல்லட்டும்.
————————————————
என் பெற்றோர்கள், எனது மாமன் மகளைத் திருமணம் செய்யச் சொல்கிறார்கள். ஆனால் உறவின்முறையில் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து என்று பல புத்தகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் டாக்டர்கள் சொல்லக் கேட்டும், படித்தும் இருக்கிறேன். அதனால் இத்திருமணத்துக்கு நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அதேநேரத்தில் அந்தப்பெண்ணை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உறவின் முறையில் நான் திருமணம் செய்யலாமா, கூடாதா?
குழப்பமே வேண்டாம். நீங்கள் கேள்விப்பட்டது முற்றிலும் உண்மை. தினம்தினம் நானும், என்னைப் போன்ற பிற டாக்டர்களும் பார்க்கும் அநேக நோய்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? மரபணுக்கள்! மரபணுக்கள் கலப்புத் திருமணங்கள் செய்வதால் வலுப்பெறும். அதை ஒட்டு வீரியம் என்போம்.
அதுவே உறவுக்குள் திருமணம் செய்யும்போது அடுத்த தலைமுறையின் வீரியம் குறைந்துவிடுகிறது.
நோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே பரவலாக இருக்கும். இப்படி லெட்கால் ஜீன்ஸ் கொண்ட அதே ரத்த வம்சத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் புரியும் போது நோய் இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்க அதிக வாய்ப்புள்ளது.
அதனால்தான் ஆடு, மாடு, குதிரை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை இனப்பெருக்கம் செய்யும்போது வேறு ரத்தவழியில் வந்த ஆரோக்கியமான துணையுடன் அந்த மிருகங்களைச் சேர்த்து வைப்பார்கள். மிருகங்களுக்கே இவ்வளவு குலம், கோத்திரம் பார்க்கும்போது மனிதர்கள் நாம் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டும்! உறவுக்குள் திருமணம் என்பது, ஓல்டு பேஷன் மட்டுமல்ல, ஓட்டை பேஷனும்கூட!