Home உறவு-காதல் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க இலகுவான வழிகள்!

கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க இலகுவான வழிகள்!

64

கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.

* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம்.

* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.

* ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.

* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.

* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும்.

Related image

* சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது.

* ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு.

* காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.

* கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும்.

* பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். ‘நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்’ என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்