Home பெண்கள் உடல் கட்டுப்பாடு வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க

வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க

108

உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் தொந்தியைக் குறைக்க உதவும். எதிர்மறை கலோரி சமநிலையை அடைவதே இதற்குத் தீர்வு, அதாவது, உள்ளெடுக்கும் ஆற்றலைவிட செலவழிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் உடல் எடையைக் குறைக்கவும் தொந்தியைக் குறைக்கவும் உதவும்.

அடிவயிற்றில் காணப்படும் கொழுப்பைக் குறைப்பதற்குத் தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களில் உணவுக் கட்டுப்பாடு முக்கியமான பகுதியாகும். எடுத்துக்கொள்ளும் உணவின் அளவைக் குறித்து கவனமாக இருங்கள், அதிக சிக்கலான மாவுச்சத்துள்ள உணவுகளை (முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை) சேர்த்துக்கொள்ளுங்கள். அரிசி, மைதா, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு, இனிப்பான பானங்கள் போன்ற எளிய மாவுச்சத்து உணவுகளை விட புரதம் நிறைந்த, பிற தேவையற்ற சத்துகள் குறைவாக உள்ள உணவு வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் (நெய், டால்டா, வனஸ்பதி போன்றவை) மற்றும் மாறுபக்கக் கொழுப்பு (டிரான்ஸ் ஃபேட்) உணவுகளுக்குப் பதிலாக பாலி-அன்-சேச்சுரேட்டட் கொழுப்பு உணவுகளை (சூரியகாந்தி எண்ணெய், குசும்பா (சாஃபிளவர்) எண்ணெய் போன்றவை) எடுத்துக்கொள்ளலாம்.

வயிற்று கொழுப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் எல்லாவற்றையும்விட முக்கியமானது உடற்பயிற்சி ஆகும். உடல் எடையைக் குறைப்பதற்கு தொடக்கத்தில், தினமும் 20-30 நிமிடங்கள் தொடர்ச்சியான மிதமான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள் (பிறகு தினமும் 60 நிமிடங்கள் வரை அதிகரித்துக்கொள்ளலாம்). பளு தூக்கும் பயிற்சிகளும் வயிற்றுத் தசைகளைக் குறைக்க உதவும். சிட்-அப்ஸ், கிரன்ச்சஸ் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளும் வயிற்றுத் தசைகளை இறுக்க உதவும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் ஏரோபிக் பயிற்சிகள் மிகவும் உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகமாக நடப்பது, மெதுவாக ஓடுவது, ஒரே இடத்தில் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் வயிற்றுப் பகுதிக் கொழுப்பைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி உடல் பருமன் கொண்டவர்கள் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கையில் அதற்கேற்ப கொழுப்பும் அதிகமாகக் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்து, அதிக எடை குறைக்கும்போது வயிற்றுக் கொழுப்பும் அதிகம் குறைகிறது. வயிற்றுப் பகுதியில் மட்டும் அதிக பருமனாக இருக்கும் நபர்கள், உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்வதுடன், ஏரோபிக் பயிற்சிகளும் செய்துவந்தால், அதிக பலன் கிடைக்கிறது.

தொந்தியைக் குறைக்க ஏதேனும் மருந்துகள் உதவுமா என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது, தொந்திக் கொழுப்பைக் குறைக்க அதிக பலன் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான வழிகள் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதே ஆகும், குறிப்பாக உடற்பயிற்சியே சிறந்த வழி எனலாம்.