இல்லறத்திலும் சரி, நமது அலுவலகங்களிலும் சரி, நாம் தெரிந்து செய்யும் தவறுகளை விட, தெரியாமல் செய்யும் தவறுகள் தான் அதிகம். நாம் தெரிந்தே செய்யும் தப்புகளுக்கு கிடைக்கும் தண்டனைகளை விட, தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு தான் தண்டனையும், மன வேதனையும் அதிகமாக கிடைக்கும். இல்லறம் என்று எடுத்துக் கொள்ளும் போது, அக்கறை, அன்பு, பரிவு, பாசம் என்ற பெயரில் தான் நாம் அதிகமாக தவறுகளை செய்கிறோம். ஓர் கணவனாக, மனைவியாக, அப்பாவாக, அம்மாவாக நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தவறுகள் தான் உறவில் விரிசல் விழ காரணியாக இருக்கின்றன. அதிலும், முக்கியமாக தியாகம், பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுகள் என இந்த இரண்டு தவறுகளை நீங்கள் தெரியாமல் கூட செய்துவிட கூடாது என குடும்பநல நிபுணர்கள் கூறுகின்றனர்….
எப்படி முடியும்? உங்களுக்கு பிடித்த வாழ்க்கை, உங்களுடைய வாழ்க்கையை, இயல்பு நிலையை துறந்து வாழ்கிறீர்கள் எனில், நீங்கள் நீங்களாகவே இல்லாத போது, நீங்கள் எப்படி ஒரு நல்ல தந்தையாகவோ, கணவனாகவோ, மனைவியாகவோ இருக்க முடியும். தியாகம் வேண்டாமே! இல்லறம், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற ஓர் வாழ்வியல் முறை என்பது மிகவம் இனிமையானது.
பலருக்கு இது சரியாக அமைவதில்லை. ஆனால், நன்கு அமைந்து நீங்கள் தியாகம் செய்கிறேன் என்ற பெயரில் ஓர் யோகி போல நினைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ள வேண்டாம். தியாகம் செய்வதால் வரும் நன்மையையும், இன்பமும் அனைவரையும் மகில்விக்காது. எனவே, எதையும் புரிந்து, நல்லது, கெட்டதை பகுத்தறிந்து அதற்கு ஏற்ப முடிவெடுங்கள்.
சுதந்திரம்! கணவன், மனைவி, அம்மா, அப்பா, பெற்றோர் பிள்ளைகள் என ஓர் குடும்பத்தில் பல முகங்கள் இருக்கின்றன. இந்த முகங்களின் பாவங்களை சுதந்திரமாக காட்டுங்கள். சிரிப்பு வந்தால் சிரியுங்கள், உங்கள் குழந்தைகளை சிரிக்க விடுங்கள், அழுதால் அழ விடுங்கள்.
நல்ல ஆசான்! பெற்றோர் தான் குழந்தைகளின் சிறந்த ஆசான்கள். மேலும், தவறுகள் செய்வது இயல்பு என்பது உணர்ந்து. அதை திருத்த கற்றுக் கொடுங்கள், வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுங்கள். மற்றவரது வாழ்க்கையை பிரதி எடுக்க கற்றுத்தர வேண்டாமே! வழி அமைக்க கற்றுக் கொடுங்கள்! இப்படி தான் நடக்க வேண்டும், இதை தான் படிக்க வேண்டும், இதை செய்தால் தான் நன்கு சம்பாதிக்க முடியும் என கண்ட கருத்துக்களை கண்மூடித்தனமாக பிள்ளைகள் மீது திணிக்காமல். வழிகாட்டுகிறேன் என அவர்களை குழப்பாமல், அவர்களுக்கான வழியை அமைத்துக் கொள்ள உதவுங்கள் அதுவே போதும்!