Home ஜல்சா ஹாட் அழகி சன்னி லியோனின் பியூட்டி சீக்ரெட்ஸ் இதுதான்…

ஹாட் அழகி சன்னி லியோனின் பியூட்டி சீக்ரெட்ஸ் இதுதான்…

24

கட்டான வடிவழகை கொண்ட அழகான பெண்களையே எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த வகையில், இன்றைய இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட அழகி என்றால், அது சன்னி லியோனுக்குத்தான் பொருந்தும். சன்னி லியோன் புத்துணர்ச்சியுடைய அழகி.

பர்ஃபெக்ட் உடலமைப்பு, ஃபிரெஷ். அதனாலேயே உலகில் உள்ள பில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்தில் சன்னி லியோன் இடம் பிடித்துள்ளார். அப்படி சொக்க வைக்கும் அழகைப் பெற அவர் என்ன தான் செய்கிறார்?

அழகை ரசிப்பதிலும் பாராட்டுவதிலும் ஆராதிப்பதிலும் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் மட்டும் தான். அந்த வகையில் சன்னி லியோன் கொடுத்து வைத்தவர். ஆம். அவருடைய அழகை மெருகூட்டுவதில் அவரைவிட அவருடைய கணவர் தான் அதிக முயற்சி எடுக்கிறார் என்றால், லியோன் கொடுத்து வைத்தவர் தானே!

சன்னி லியோனின் கணவர் உயர்தர ஜிம் வைத்து நடத்தி வருகிறார். அவர்தான் சன்னி லியோனின் மேனேஜரும்கூட. சன்னி லியோன் சில சமயம் ஜிம்முக்கு செல்வதைத் தவிர்த்தால், அவருடைய கணவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிடுவாராம்.

வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நேரங்களில், கட்டாயமாக, யோகா பயிற்சிகளை மறக்காமல் செய்துவிடுவாராம்.
சன்னி லியோன் காபியை விரும்பிக் குடிக்கிறார். ஆனால், பிளாக் காபி மட்டுமே குடிக்கிறார். பால் சேர்த்துக் கொள்வதில்லை.

தினசரி டயட்டில் தேங்காய் தண்ணீரை கட்டாயம் சேர்த்துக் கொள்வது தான் சன்னிலியோனின் பியூட்டி சீக்ரெட்
தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது தான், பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் சன்னி லியோனின் அழகுக்கு மூல மந்திரம்
தூங்குவதற்கு படுக்கைக்குச் செல்லும் முன்பு கட்டாயம் குளிக்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

ஃபாஸ்ட்புட் உணவுகளைத் தொடுவதே இல்லையாம். தினமும் 20 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்தால், உடலில் உண்டாகும் தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என நம்புகிறார் லியோன்.