Home சூடான செய்திகள் தேனிலவு தம்பதிகள் சந்தோசமாக இருக்கிறார்களா?

தேனிலவு தம்பதிகள் சந்தோசமாக இருக்கிறார்களா?

83

27-1437994576-4-cuddling-loversபுதிதாக திருமணமான தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும் ஜோடியாக சுற்றுவார்கள்.புது இடங்களுக்கு தனிமையில் ஹனிமூன் செல்வார்கள், ஒருவித கிரக்கத்தில் திரிவார்கள். ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவித அச்ச உணர்வுடன் இருக்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

திருமண மயக்கம் என்பது புதுமணத்தம்பதியர் அனைவருக்குமே இருக்கக் கூடியதுதான். இதனாலேயே ஒரு ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள்.

விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை முடிந்து மறுபடியும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது ஆகும். இந்திய தம்பதிகளுக்கு இந்த மயக்கத்தோடு கர்ப்பமும் இணைந்து கொள்ளும்.

அதேசமயம் ஆஸ்திரேலியா நாட்டில் புதுமணத்தம்பதிகள் 73 முதல் 76 சதவிகிதம் பேர் வரை ஒரு வித அச்ச உணர்வுடனே வாழ்வதாக கூறியுள்ளனர்.

டிய்க்கின் பல்கலைக்கழக ஆஸ்திரேலிய மையத்தின் சார்பில் வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்தது.

தேனிலவு என்பது சம்பிரதாயத்துக்குரிய சடங்கு தானே தவிர உண்மையில் கணவன், மனைவி இருவரும் திருமணமான முதல் வருடத்தில் மனதார மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே அதிக நேரமும் அக்கறையும் எடுத்து கொள்கின்றனராம்.

அதனாலேயே புது மணத்தம்பதிகள் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணமான இரண்டாவது வருடத்தில் இருந்தில் 78 சதவிகிதம் பேர் சராசரியான நிலைக்கு திரும்பி விடுவதாக கூறியுள்ளனர்.

திருமணமாகி 5 முதல் 13 வருடங்களுக்குள் அவர்களின் சேமிப்பு, குழந்தை பிறப்பு, பொருளாதாரம் போன்றவைகளை திட்டமிடுவதாகவும் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் கூறியுள்ளார்.