Home உறவு-காதல் Honeymoon நீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க!

Honeymoon நீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க!

30

பெண்கள் சில வகை ஆண்களை கண்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். அவர்களுடன் ஆரம்பத்தில் ஃபிரண்டாக பழக ஆராம்பித்தாலும், அவர்களது குணங்களை கண்டு நாளடைவில் விலகி போக ஆராம்பித்துவிடுவார்கள்.

அப்படியே இது போன்ற குணங்களை உடைய ஆண்களை அவர்கள் திருமணம் செய்தாலும், அவர்களது வாழ்க்கை நரகமாக தான் இருக்கும். எனவே ஆண்களே இது போன்ற குணங்கள் உங்களிடம் இருந்தால், அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் பெண்கள் உங்களை விரும்புவார்கள்.

பேசவிடாமல் இருப்பது பெண்கள் உங்களை சிறிது நேரம் பேச அனுமதிப்பார்கள், பின்னர் உங்களை பேசவிடுவார்கள். நீங்கள் அவர்களை பேச அனுமதிக்காமல் நீங்களே பேசிக்கொண்டிருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. இவ்வாறு நீங்கள் அவர்களை பேச அனுமதிக்காமல் இருப்பது, அவர்களின் பேச்சை கேட்ட உங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், அவர்கள் சிறந்த தீர்வு கொடுத்தால் கூட மதிக்காமல் இருப்பது அவர்கள் உங்களை விட அறிவாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அர்த்தமாகும். உங்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், இந்த ஒரு குணம் உங்களை வெறுக்க போதுமானது.

பெண்கள் கெட்டவர்கள் ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள், பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று பேசுவது கூடாது. இவ்வாறு பேசினால் பெண்களுக்கு சுத்தமாக உங்களை பிடிக்காது. உங்களுக்கு பெண்களால் ஏதேனும் கெட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் அனைத்து பெண்களையும் குறை கூறுவது தவறு

அமைதியாக இருக்க வேண்டும்! நீங்கள் பெண்களை எவ்வளவு தான் சீண்டினாலும், எவ்வளவு கோபப்பட்டாலும், தவறு செய்தாலும் அனைத்தையும் தாங்கி கொண்டு பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களது உணர்ச்சிகள் சில சந்தர்பங்களில் கண்டிப்பாக வெளிவரத்தான் செய்யும். எதையும் பெண்கள் பொருத்து போக வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் பெண்கள் விரும்பமாட்டார்கள்.

மொக்கை ஜோக் நீங்கள் உங்களது துணையை கஷ்டப்படுத்தும் படி கிண்டல் அடிப்பது, காமெடி என்ற பெயரில் அவரது மனதை வருந்த செய்வது போன்றவை வேண்டாம். இப்படி இருக்கும் ஆண்களின் அருகில் பெண்கள் நெருங்கவே மாட்டார்கள்.

தாழ்த்துதல் பெண் என்றால் சமையல், வீட்டு வேலைகளை தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் அவர்களுக்கு என எந்த ஒரு தனிப்பட்ட இலட்சியமும், வேலையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்ற ஆசையும் இருக்க கூடாது என நினைக்கும் ஆண்களுடன் பெண்கள் வாழ்வது நரகத்தில் வாழ்வதற்கு சமமாகும்.

மூக்கை நுழைப்பது உங்களது துணைக்கு யாருமே இல்லை என்பது போல நினைத்துக்கொண்டு, அவரது எல்லா வேலைகளிலும் முக்கை நுழைப்பது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

நீ இப்படி தான் இருக்கணும் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களது யோசனைகள் அவர்கள் மீது திணிப்பது தவறு. அவரை அவருக்கு பிடித்த மாதிரி வாழவிடுங்கள்.