Home பெண்கள் அழகு குறிப்பு பெண்கள் அழகான உதட்டு அழகை பெற

பெண்கள் அழகான உதட்டு அழகை பெற

46

சீரான மென்மையுள்ள இதழ்கள் என்பது எல்லாப் பெண்களும் விரும்பும் ஒன்று. ஆனாலும் எப்போதும் எல்லோருக்கும் இது சாத்தியமாகிவிடாது. அடிக்கடி மேக்கப் செய்வது, சூரிய ஒளியால் பாதிக்கப்படுவது போன்றவற்றால் உங்கள் உதடுகள் பல வழிகளில் பாதிப்படையலாம். நாம் முகத்திற்கு சன்ஸ்கிரீன் போடுவோம் ஆனால் பெரும்பாலும் நமது உதடுகளைக் கவனிக்கத் தவறிவிடுவோம். உதடுகள் கருமையாகி,சீரற்ற தோற்றத்தைப் பெற நமது வாழ்க்கை முறையும் காரணமாகிறது. கவலை வேண்டாம்! சில நாட்களில் உங்கள் உதடுகளின் கருமையைப் போக்கி மின்னச் செய்ய சில பயன்படுத்தி சோதனை செய்யப்பட்ட வழிமுறைகள் உள்ளன.

சர்க்கரை (Use some sugar)

சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவும் இயற்கையான பொருளாகும், அதுமட்டுமின்றி சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது. தேனில் சர்க்கரையைக் கலந்து விரைவில் இதற்குத் தேவையான பொருளைத் தயாரித்துவிடலாம். சர்க்கரை நமது சருமத்தில் இருந்து இறந்த மற்றும் உலர்ந்த செல்களை நீக்குகிறது, தேன் உங்கள் உதடுகளுக்கு ஓட்டத்தையும் ஈரப்பதத்தையும் அளித்து, உதடுகளின் கருமையைப் போக்க உதவுகிறது.

எலுமிச்சை (Squeeze some lemons)

எலுமிச்சையில் உள்ள அமிலம் இயற்கையான வெளுப்புப் பொருளாக (ப்ளீச்) செயல்படுகிறது. இதனால், உதடுகளின் கருமையைக் குறைக்கவும் உதட்டு சருமத்தின் மென்மையை சீராகப் பராமரிக்கவும் உதவுகிறது. தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு எலுமிச்சையை அறுத்து, அப்போதே அந்தச் சாற்றைக் கொண்டு மசாஜ் செய்வது நல்லது. அது உங்கள் உதடுகளின் கருமையைக் குறைக்க உதவும். முகத்திற்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சைச் சாறு முகப்பரு வடுக்களையும் சருமத்தில் இருக்கும் பரும்பகுதிகளையும் போக்கும் பண்பு கொண்டது.

ரோஜா (Get some roses)

பன்னீர் உங்கள் சருமத்தின் கருமையைப் போக்க உதவும். ரோஜா இதழ்களைப் போன்ற மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற பன்னீர் உதவுகிறது. பன்னீரை நீரில் கலந்து அதனுடன் சிறிதளவு தேனைச் சேர்த்து தினமும் உதடுகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்யவும். சில நாட்களிலேயே நீங்கள் வித்தியாசத்தை உணர முடியும். பன்னீரை நீர் மற்றும் பாலுடன் சேர்த்து அதனையும் பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெய் (Grab some olive oil)

ஆலிவால் முடியாதது என்ன இருக்கிறது! ஆலிவ் எண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகளும் அதிலுள்ள ஊட்டச்சத்துகளும் சில நாட்களிலேயே உங்கள் உதடுகளின் நிறம் மாறும். அதிக பலன்களைப் பெற உயர் தர (எக்ஸ்ட்ரா விர்ஜின்) எண்ணெயைப் பயன்படுத்தவும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு உங்கள் உதடுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்துகொள்ளவும். சில வாரங்களில், நீங்கள் வித்தியாசத்தை உணர முடியும். உங்கள் உதடுகளின் கருமை குறைந்து, மென்மையாகியிருக்கும்.

மாதுளை (Use pomegranates)

இயற்கையாகவே பளபளப்பான, மென்மையான உதடுகளைப் பெற மாதுளம்பழமும் உதவும். இதிலுள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளுக்கு ஊட்டத்தை அளித்து வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தையும் அளிக்கிறது. இதுவும் உங்கள் உதடுகளை மின்னும் கோவை இதழ்களாக மாற்ற உதவும். உங்கள் உதடுகளுக்கு இயற்கையாகவே நிறத்தை அளிக்கிறது. இனி நீங்கள் லிப்ஸ்டிக், க்ளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தாமலே அழகு உதடுகளைப் பெறலாம்.

மாதுளம்பழத்தை உதிர்த்து எடுத்துக்கொண்டு, அதனுடன் பாலாடையைச் சேர்த்து கலந்து நாளொன்றுக்கு ஒரு முறை உதடுகளில் தடவி மசாஜ் செய்யவும். இன்னும் அடர் நிறம் பெற, இதனை பீட்ரூட் சாற்றுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

மின்னும் மென்மையான இதழ்களைப் பெற உதவும் இரகசிய உட்பொருள்கள் உங்கள் வீட்டிலேயே கிடைப்பதை நினைத்தால் நிச்சயம் ஆச்சரியமாகவே இருக்கும்!