சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இல்லற வாழ்க்கை வேறு, இந்த நூற்றாண்டில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இல்லற வாழ்க்கை வேறு. அன்று பெண்கள் வீட்டையும், ஆண்கள் நாட்டையும் கவனித்துக் கொண்டனர். இன்று, இருவரும் இரண்டையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.எனவே, சற்று அதிக கோபத்தை, ஆதிக்கத்தை காட்டினாலும், ஆண்கள் மனைவியிடமிருந்து சிலபல வார்த்தைகளை வாங்கி கட்டிக்கொள்ளும் நிலை இன்று வலுவாகவே இருக்கிறது. இதோ, கணவர், கடவுளா? மிருகமா? என பெண்கள் கண்டறியும் ஆறு வித்தியாசங்கள்…
மதிப்பளிப்பவர் – பொறுத்துக் கொள்பவர்! மனைவி ஒரு காரியத்தை செய்யும் போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும். பல்லைக் கடித்து கொண்டு பொறுத்துக் கொள்ள கூடாது.
பாராட்டுபவர் – கட்டுப்படுத்திக் கொள்பவர்! மனைவி வெற்றி அடையும் போது பாராட்ட வேண்டும். பொறாமையால் வெளிப்படும் கோபத்தை, ஈகோவை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க கூடாது.
நேர்மையானவர் – கொடுமையானவர்! மனைவி முன்னேறும் போது நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். உறுதுணையாக இருக்க வேண்டும். முன்னேற்றத்தை கெடுக்கும் கொடுமையானவராக இருக்க கூடாது.
பாசமானவர் – ஒட்டிக் கொண்டிருப்பவர்! நல்லதோ, கெட்டதோ எப்போதும் பாசமாக இருக்க வேண்டும். மனைவியிடம் இருந்து கிடைக்கும் நன்மைகளுக்காக மட்டும் ஒட்டிக் கொண்டிருக்க கூடாது.
பாதுகாப்பானவர் – சொந்தம் கொண்டாடுபவர்! ஒரு பாதுகாவலனாக இருக்க வேண்டும். தன் பொருள் என்பது போல, தான் சொல்வதை மட்டும் கேட்கும் ஆளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க கூடாது.
தீவிரமானவர் – ஈர்ப்பு கொண்டிருப்பவர்! தப்பு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும், நன்மை செய்தால் தட்டிக் கொடுக்க வேண்டும். வெறுமென ஈர்ப்பு மட்டும் கொண்டிருக்கக் கூடாது.