Home பெண்கள் அழகு குறிப்பு உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்

உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்

21

தேனை ஆல்ரவுண்டர் என்றே சொல்லலாம். இனிப்புகளிலேயே ஆரோக்கியம் நிறைந்தது தேன். இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது சருமம் மற்றும் தலைமுடிக்கும் பொலிவைத் தருகிறது.

தேன் சருமம் மற்றும் தலைமுடியில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களைத் தவிர்க்க தேன் பயன்படுகிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் தேனில் உண்டு. அவை என்னென்ன?

சருமம் பொலிவாக

கடலைமாவு, சந்தனம், ரோஸ் ஆயில் ஆகியவற்றுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ சருமம் பொலிவு பெறுவதுடன் மென்மையாகவும் இருக்கும்.

பட்டுபோன்ற கூந்தலுக்கு

இரண்டு ஸ்பூன் தயிர், இரண்டு முட்டை, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தலைக்குத் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்துவர, உடல் சூடு குறைவதோடு உங்கள் தலைமுடி பட்டுப்போல் மின்ன ஆரம்பிக்கும்.

மின்னும் தலைமுடி

தலையில் ஆலிவ் ஆயிலுடன் தேன் கலந்து தேய்த்து சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, பின் குளித்துவர தலைமுடி டாலடிக்கும்.

சரும கருந்திட்டுகள் நீக்க

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தில் உண்டாகும் கருந்திட்டுகளைப் போக்குகிறது. அதோடு முகத்தின் பொலிவையும் இரு மடங்காகக் கூட்டுகிறது.

பால், லெமன், ஆலிவ் ஆயில் ஆகியவற்றுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

தேவையற்ற முடி நீக்க

முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கவும் தேன் பயன்படுகிறது. 1 ஸ்பூன் தேனும் ஒர் ஸ்பூன் லெமன் ஜூஸ், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் 3 நிமிடங்கள் வைத்திருந்து, சருமத்தில் தேவையில்லாத முடி வளர்நதிருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் கழித்து நீங்கள் அப்ளை செய்ததற்கு எதிர் திசையில் இருந்து துணி கொண்டு அப்ளை செய்த க்ரீமைத் துடைக்க வேண்டும்.

தீக்காயம் போக்க

சிறுசிறு தீக்காயங்களைக் கூட தேன் குணப்படுத்தும். தீக்காயம் பட்ட இடத்தில் தேனைத் தடவி வர, விரைவில் தீக்காயம் குணமாகும்.

முகப்பருவை குணப்படுத்த

இரவு தூங்கச் செல்லும் முன், பட்டை பொடியுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, அடுத்த நாள் காலையில் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.

அவ்வாறு தேன் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்கிக்கொண்டே இருக்கும் அமுதசுரபியாகத் திகழ்கிறது.