Home அந்தரங்கம் தற்பால் சேர்க்கை விருப்பத்திற்கு ஜெனடிக் கோட்பாடு

தற்பால் சேர்க்கை விருப்பத்திற்கு ஜெனடிக் கோட்பாடு

43

தற்பால் சேர்க்கை விருப்பத்திற்கு ஜெனடிக் கோட்பாடு, ஹார்மோன் கோட்பாடு, சைக்கோ அனலிடிக்கல் தியரி, பியர் இன்ஃபுளுயன்ஸ் தியரி என்ற நான்கு கோட்பாடுகளையும் மருத்துவ ஆய்வுகள் ஏற்கவில்லை.

நான்கு சதவீத மக்கள் தற்பால்சேர்க்கையை விரும்புகின்றார்கள். இவர்களின் வளர்ப்பிற்கும் இந்த தற்பால்சேர்க்கை விருப்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பாலியல் தேர்வானது, குறிப்பிட்ட சில குடும்பங்களில் வழிவழியாக தொடர்வதையும், இரட்டையர்களின் தேர்வுகள் ஒரேமாதிரியாக இருப்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே ஓரினச்சேர்க்கை விருப்பம் வளர்ப்பினால் ஏற்படுதில்லை என்று லண்டன் உளவியல் மையத்தின் ஆய்வாளர் க்லென் வில்சன், கிழக்கு லண்டன் பல்கலைக்கழக உளவியல் உயிரியலாளர் காசி ரகுமான் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

தற்பால்சேர்கையில் ஈடுபடாத, ட்ரோசோக்பிலா எனும் பூச்சியில் மரபணுவை மாற்றி சோதித்தபோது, அவை தற்பால்சேர்க்கையில் ஈடுபாடுடன் இருப்பதை கண்டறிந்தனர்.

சூழ்நிலை தற்பால்சேர்க்கையாளர் (Situational Homosexual) என்ற வகையினர் தற்பால் சேர்க்கையில் சூழ்நிலை காரணமாக ஈடுபடுபவர்கள், இவர்களை முழுமையான தற்பால்சேர்க்கையினர் என நினைத்தல் கூடாதென மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கீழ்வரும் காரணிகளால் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பெறுகிறது.

ஒரே விடுதியில் தங்கியிருக்கும் நபர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்களும் அடங்குவர்.
ஓரிடத்தில் வேலையின் காரணமாக தங்கியிருப்பவர்கள்.
சிறையில் ஓரிடத்தில் இருக்கும் கைதிகள், அலுவகப் பணி காரணமாக தங்கியிருப்பவர்கள்.
திருமணம் ஆனபிறகு மனைவியுடன் உறவுகொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.

ஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கு நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. கனடா, நோர்வே, நெதர்லாந்து, பெல்சியம், சுவீடன், எசுப்பானியா, தென் ஆபிரிக்கா நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் இத்திருமணத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதித்துள்ளன.

ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும்போதும் ஒரு பால் ஈடுபாடுள்ளோர் விஷயத்தில் ஆதரவா, எதிர்ப்பா என்னும் கேள்வி எழுந்துவிடுகிறது. இதற்குப் பதில் அளிப்பதே பெரும் பிரச்னையாகப் போய்விடுகிறது. மாறிவரும் இன்றைய சமூகத்தில் மனிதனின் தேவைகளும் சவால்களும்கூட பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பெறுவது, தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வது என்று இதற்குப் பல உள்நோக்கங்கள் இருக்கும்