Home பெண்கள் அழகு குறிப்பு வறண்ட சருமத்திற்கு பொலிவு தரும் வீட்டு தயாரிப்புகள்

வறண்ட சருமத்திற்கு பொலிவு தரும் வீட்டு தயாரிப்புகள்

41

ஆடி மாதம் வரப்போகிறது. ஆளையே தூக்கிப்போகும் அளவிற்கு காற்று வீசும். வெளியே சென்றாலே தூசி, மண் என அத்தனையும் வந்து சருமத்தில் ஒட்டிக்கொள்ளும். வெளியே சென்று வந்தாலே முகத்தோடு உடம்பையும் சேர்த்து கழுவ வேண்டியிருக்கும். காற்று அதிகமாக வீசும் காலத்தில் சருமம் உலர்ந்து வறண்டு போய்விடும். எனவே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சருமத்தை பொலிவாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்கு கனிந்த பூசணி, இத்துடன் கால் கப் தயிர், இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை முகம், கை, கால், கழுத்து என நன்றாக தடவி காயவைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி துடைத்து விடவும். வறண்ட சருமத்தினர் அப்படியே பூசலாம். அதே சமயம் எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் இந்த கலவையை லேசாக சூடு படுத்தி பின்னர் சருமத்தில் பூசலாம் சருமம் பொலிவு பெறும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பொலிவாகும்.

மூன்று காரட்டினை நன்கு வேகவைத்து மசித்துக்கொள்ளவும் . இத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து பிசையவும். இந்தக் கலவையை சருமத்தின் பூசி உலரவைக்கவும். 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது சாதாரண, வறண்ட, எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.

இரண்டு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், இரண்டு டேபிள்ஸ்பூன் தயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு பஞ்சில் தொட்டு சருமத்தில் அனைத்து பகுதிகளிலும் பூசவும். பதினைந்து நிமிடங்கள் காயவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசவும். சருமம் பொலிவாகிவிடும். தயிர் இல்லாதவர்கள் பால் சேர்க்கலாம்.

ஆரஞ்ச் பவுடர், ஆலிவ் எண்ணெய், பாதம் எண்ணெய், பசும்பால், ஆகியவை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை லேசான காட்டன் பஞ்சு மூலம் தொட்டு பூசவும். நன்கு உலரவைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும் சருமம் மினுமினுப்பாக மாறிவிடும்.