விடுமுறை நாட்களில் குழந்தைகள் வெயிலில் சென்று அதிக நேரம் விளையாடுவார்கள். இதனால் உடல்நலப்பிரச்சனைகள் வரும். இந்த பிரச்சனைகளில் இருந்த குழந்தைகளை காக்க என்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பார்க்கலாம்.
* சிறு குழந்தைகளுக்கு உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம். குழந்தைகள் நீர் குடிக்க மறந்து விடுவார்கள். ஆக குழந்தைகளுக்கு நீங்களே அவ்வப்போது சிறிது நீர் கொடுங்கள். குழந்தைகள் சோர்ந்து இருந்தாலோ, குறைவாக சிறுநீர் சென்றாலோ குழந்தைக்கு நீர்பற்ற வில்லை என்பதனை உணர்க்க.
* குழந்தைகளை 11-4 வரை வெளியில் விளையாட விடாதீர்கள். குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. வெய்யிலில் எரிந்து விடும். சன்-ஸ்கிரீன் லோடின் கண்டிப்பாய் பயன்படுத்துங்கள்.
* சன்ஸ்டிரோக் என்பது குழந்தைகளுக்கு மிகவும் அபாயமானது.
* சளி, இருமல் போன்ற அலர்ஜி பாதிப்புகள் ஏற்படலாம்.
* பூஞ்சை பாதிப்பு குழந்தைகளை எளிதில் தாக்கும்.
எனவே
* கை, கால்களை குழந்தைகளுக்கு சுத்தமாக கழுவுங்கள்.
* வேர்வை நனைந்த உடைகளை உடனுக்குடன் மாற்றி விடுங்கள்.
* மற்றவர்களின் ஆடை ஷீ இவற்றினை உங்கள் குழந்தைகள் அணியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* செல்லப் பிராணிகளுடன் உங்கள் பிள்ளைகள் விளையாடுவதை தவிருங்கள்.
* வேர்குரு சர்வ சாதாரணமாய் குழந்தைகளைத் தாக்கும். எனவே தரமான சோப் கொண்டு இரண்டு வேளை குளிக்க வைத்து பால்கம் பவுடரினை உபயோகியுங்கள்.
* கண்களில் எரிச்சல், கிருமி தாக்குதல் ஏற்படலாம். கறும்பு கண்ணாடி அணிவது, கிருமி தாக்குதலுக்கு முறையான சிகிச்சை அளிப்பதும் அவசியம்.
* குழந்தைகள் விடுமுறை என்றாலே நீச்சல் குளத்திற்கு சந்தோஷமாய் ஓடி விடுவார்கள். நல்லது தான். ஆனால் இதில் காதில் கிருமி தாக்குதலும் சர்வ சாதாரணமாய் வந்து விடும். சரியான சிகிச்சை தேவை.
* குழந்தைகளுக்கு வெயிலில் அலைந்தால் வயிற்றுப் போக்கு எளிதில் வந்து விடும். சுத்தமான நீர், சுத்தமான உணவு, சுத்தமான சுகாதாரமாக கைகளை வைப்பது இவையெல்லாம் மிக அவசியமாகும்.