Home ஜல்சா பெண்ணின் குளியல் வீடியோ எடுத்த ஹோட்டல் நிர்வாகம் 700 கோடி நஷ்ட ஈடு

பெண்ணின் குளியல் வீடியோ எடுத்த ஹோட்டல் நிர்வாகம் 700 கோடி நஷ்ட ஈடு

162

ஜல்சா செய்திகள்:அமெரிக்காவில் ஹில்டன் நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் ஹோட்டல் ஒன்றின் குளியலறையில் இளம்பெண் ஒருவர் குளிப்பதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த குற்றத்திற்காக ரூ. 700 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளம்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், சட்டப் படிப்பு முடித்துவிட்டு சிகாகோவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து இமெயில் வந்தது. அதை திறந்து பார்த்த அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், “இந்த வீடியோவில் இருப்பது நீதானே?” என்ற கேள்வியுடன் ஒரு வீடியோவிற்கான லிங்கும் அனுப்பப்பட்டிருந்தது. அந்த லிங்கை கிளிக் செய்தபோது ஒரு பிரபல ஆபாச இணையதளத்தில் அந்தப் பெண் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருக்கும் வீடியோ வந்துள்ளது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என துளாவ துவங்கினார்.

இந்த வீடியோ ஒரு ஹோட்டலில் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். அப்போது தான் அவருக்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ‘ஹாம்ப்டன் இன்’ ஹோட்டலில், கடந்த 2015-ஆம் ஆண்டு சட்டப்படிப்பு தேர்வெழுதுவதற்காக தங்கியிருந்தது நியாபகம் வந்தது. அந்த ஹோட்டலில் குளிக்கும்போது தான் இந்த வீடியோவானது எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை உறுதி செய்தார் அந்த இளம்பெண். மேலும் இந்த வீடியோ எண்ணற்ற ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததை உணர்ந்து பதற்றமடைந்தார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மீள முடியாத அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பிரபல ஹில்டன் நிறுவனத்தில் கீழ் இயங்கி வரும் இந்த ஹாம்ப்டன் இன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அதிகம் என்பது பொதுவான நம்பிக்கை. இதனால் மற்ற ஹோட்டல்களைக் காட்டிலும் இந்த ஹோட்டலில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் குறிப்பாக பெண் வாடிக்கையாளர்கள் தங்கிச் செல்வார்கள். இதன் காரணமாகவே சட்டப்படிப்பு மாணவியும் நம்பிக்கையோடு தங்கியிருந்தார்.

மேலும் மர்ம நபர் ஒருவரிடமிருந்து அடிக்கடி மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததைத் தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தை நாடினார். இச்சம்பவத்தை வழக்காக தாக்கல் செய்த பெண், 19 பக்கங்கள் கொண்ட மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த மனுவில், தாம் நிர்வாணமாக குளிப்பதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டதற்கு ஹாம்ப்டன் இன் ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரே காரணமாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக ஹில்டன் நிர்வாகம் தமக்கு ரூ. 700 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு ஹில்டன் நிறுவனத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஹோட்டல் நிர்வாகம் சார்பில் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில், “வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு தலைசிறந்த பணி. இந்த வழக்கு எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹோட்டலில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்பொழுது இதைப்போன்ற ரகசிய கேமராக்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்”.