இக்கால கட்டத்தில் ஹை ஹீல்ஸ் போடுறது ரொம்பவே பேஷனாகி விட்டது.
இதனால் கம்பீரமான தோற்றம் மட்டுமின்றி தங்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கிடைப்பதாக பெண்கள் பலரும் கூறுவதுண்டு.
ஆனால் உண்மையில் இதற்குள் பல்வேறு ஆபத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது.
நீண்ட காலத்துக்கு ஹை ஹீல்ஸ் அணிவதால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் தவிர குதிகாலின் பின் பகுதி பெரிதாகி துருத்திக் கொண்டு சிவப்பாகவோ அல்லது வீங்கியோ இருக்கலாம்.
எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம்.
நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்ச வலி ஏற்படலாம்.
காலை உயர்த்திய நிலையில் வைத்திருப்பது குறுகிய கால தசை நார் வலியை உருவாக்கலாம், இதனால் தட்டையாக காலணிகளை அணிய முடியாமல் போகலாம்.
வலியில் இருந்து மீள்வதற்கு
* ஹை ஹீல்குள் காலைத் திணிப்பதால் ஒரு நாளில் பாதம் சுமார் 455 கிலோ சக்தியை உள்வாங்குகிறது.
* பாதத்திலிருந்த அதிகப்படி ரத்தம் வெளியேறி, வீக்கம் உருவாகிறது. இந்த வீக்கத்தை குறைக்க ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரையும், சுடுதண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றவும்.
* கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி காய வைத்து மாய்ஸ்சுரைஸ் செய்யவும். சில பயிற்சிகளையும் செய்தால் கால்வலியில் இருந்து மீளலாம்.
* காலில் வலி, வீக்கம் அதிகமானால் காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். சிறிய பந்தின் மீது காலை வைத்து உருட்ட வேண்டும், அடுத்த காலுக்கு மாற்றி அதையே செய்யவும்.
* கோவிக்குண்டுகளை தரையில் சிதறச் செய்து கால் விரல்களால் ஒவ்வொன்றாக ஒற்றியெடுக்கவும். கால்விரல்களை கீழ் நோக்கி நீட்டவும், பின்னர் அமல் நோக்கி வளையுங்கள். இதை தலா 6 முறை செய்தால் நல்லது.
* அதே போல் ஹீல்ஸ் அணிந்து படிகளில் ஏறும் போது பாதத்தின் முன் பகுதியும் குதிகாலும் ஒரே நேரத்தில் நன்றாக வைக்கப்படுவதை உறுதிப்படுத்தவும், படிகளில் இறங்கும் போது பாதத்தில் முன்பகுதி முதலில் வைக்கப்பட வேண்டும்.
* ஹீல்ஸ் அணிந்து வாகனம் ஓட்டும்போது வாகனம் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது.
கூடியவரை ஹீல்ஸ் உபயோகிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மீறி உபயோகிக்க வேண்டும் என்றால் மேற்சொன்ன பயிற்சி முறைகளை தவறாது செய்ய வேண்டும்.
ஹீல்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.
* ஹை ஹீல்ஸின் உள்ளிருக்கும் `சோல்` ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.
* அதிகநேரம் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.