இருதய பாதிப்புக்கு அடிப்படையாக இருப்பது இருதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் ஓட்டை. இருதய பாதிப்பை முற்றிலும் தடுக்க முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை. அதற்கு இந்த டிப்ஸ்கள் உதவும்.
* ரத்தத்தில் கரையும் கொழுப்புக்களான தாவர எண்ணையை உணவில் பயன்படுத்த வேண்டும்.
* 40 வயதை தொடும்போதே உணவு விஷயத்தில் அக்கறை கொள்ள வேண்டும். ருசியை தவிர்த்து உணவை மருந்தாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான நார்ச்சத்து உணவில் இருப்பது அவசியம்.
* தினமும் 3 கி.மீ தூரமாவது நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.
* தினமும் மூச்சு மற்றும் தியான பயிற்சி தேவை.
* மதிய உணவுக்கு பிறகு அரை மணி நேரமாவது கண்ணயர்வது அவசியம்.
* மார்பில் திடீரென தோன்றும் வலி, குத்தல், மயக்கம், வியர்வை கொட்டுதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம்.