Home பெண்கள் பெண்குறி பெண்களின் ஆரோகியமான பெண் உறுப்பு இப்படி இருக்கும்

பெண்களின் ஆரோகியமான பெண் உறுப்பு இப்படி இருக்கும்

4267

பெண் உறுப்பு:நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப்பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசியம்.

மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சார்ஜ் என்பது Ovelation Period என்கிறோம். சிலருக்கு அந்தகாலத்தில் வெள்ளைபடுதல் எட்டாவது நாளிலேயே கூட ஆரம்பித்து விடலாம். சிலருக்கு பதினைந்தாவது நாள் கூட இருக்கும். இதை நாம் நார்மல் வெள்ளைப்படுதல் என்கிறோம். இந்த நாட்களில் வெள்ளைப்படுதல் இருந்தால் தான் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியும். கருமுட்டை உருவாகும் நாளையே Ovelation Period என்கிறோம்.

மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும் போது வெள்ளை திரவம் வெளிப்படும். இதையும் நார்மல் என்கிறோம். இது பல பெண்களுக்கு தெரிவதே இல்லை. இதற்காக பயப்படும் பெண்களும் உள்ளனர். இதைப் படிப்பவர்கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள்ளைப்படுதலே ஆகும்.

அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவதால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். இதையும் நாம் நார்மல் என்று கூறுகிறோம். இதையே பலர் மாத விலக்கு வருவதற்கு அறிகுறியாகக் கொள்ளலாம். மேலும் கர்ப்பக் காலத்தில் வெள்ளைப்பட்டாலும் அதையும் நார்மல் என்று கூறுகிறோம்.

சில பெண்களுக்கு பருவம் அடைவதற்கு முன்பே எட்டு வயது, ஒன்பது வயதில் வெள்ளைப்படுகிறது. இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல்லை. சிலருக்கு பூச்சுத் தொல்லை அதிகமாக இருந்தாலும் இம்மாதிரி வெள்ளைப்படும். இதை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் குணப்படுத்தி விடலாம்.