Home ஆரோக்கியம் தாங்க முடியாத தலைவலியா? இத ஒரு கப் குடிங்க

தாங்க முடியாத தலைவலியா? இத ஒரு கப் குடிங்க

32

தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர்.

அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் ஏற்படும்.

ஒற்றை தலைவலி வந்து, அது 4-70 மணிநேரத்திற்கும் நீடித்திருந்தால், அதிலிருந்து விடுபட மருந்து மாத்திரைகளை எடுப்போம். ஆனால் ஒற்றை தலைவலியை எளிய இயற்கை வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம்.

தேவையான பொருட்கள்:

காபி மற்றும் எலுமிச்சை

காபி:

காபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும். மேலும் காபி பித்தப்பையை நன்றாக விரிவடையச் செய்து, பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கும்.

எலுமிச்சை:

எலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.

செய்முறை:

முதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.

தலைவலியை அனுபவிக்காத மனிதர்களே இருக்க முடியாது. எப்போதாவது தலைவலி ஏற்பட்டுப் பின் மறைவது இயல்பு.

அதுவே, அடிக்கடியும், தொடர்ந்தும் ஏற்பட்டால், கவனமாக இருக்க வேண்டும். உடல்ரீதியான பிரச்சினை ஏதாவது ஒன்றை அந்தத் தலைவலி சுட்டிக்காட்டக்கூடும்.

குறிப்பாக, கண், தலையின் பின்புறப் பகுதி, தலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டால் அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காரணம் அந்த வலி, மூளையில் கட்டி, மூளைக் கசிவு மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

தலைவலியா..? பலவிதம் உண்டு ஆபத்து! எச்சரிக்கை.

அதுமட்டுமின்றி, நாளடைவில் இந்த வலி, தீவிர தலைவலிக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.

தினமும் அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான தலைவலி பிரச்சினைகள் ஏற்படலாம். நாம் உட்காரும்போது, நமது கழுத்தின் பின்பகுதி மற்றும் முதுகுத்தண்டுப் பகுதியில் கடுமையான வலியை உணரக்கூடும்.

அதிகப்படியான தலைவலியும், இடுப்பு வலியும் சில நேரங்களில் வாந்தி, வயிற்று குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தலைவலி அதிகமாக இருப்பதால், சிலருக்கு கடுமையான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.