Home ஆரோக்கியம் ஒற்றைத் தலைவலிக்குத் தீர்வு தரும் வீட்டு வைத்தியங்கள்

ஒற்றைத் தலைவலிக்குத் தீர்வு தரும் வீட்டு வைத்தியங்கள்

32

வேலைப்பளு, மன அழுத்தம், தலையில் நீர் கோர்த்தல் போன்றவற்றால் உண்டாகின்றன. தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலியைத் தரும். தலைவலி வந்தால் வேறு எந்த வேலையையும் செய்ய முடியாது. இதற்கு முதன்மையான தீர்வு ஓய்வு தான்.

தலைவலிக்கு மருந்து எடுத்துக் கொள்வதென்றால், அலோபதியை விட நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தியிருக்கின்றனர். தலைவலியைத் தீர்க்கும் நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியங்கள் தான் என்னென்ன?

முள்ளங்கி சாறைப் பிழிந்து குடித்தால் தீராத தலைவலியும் தீரும்.

கொதிக்கும் தண்ணீரில் காபித்தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

வெற்றிலைச்சாறுடன் கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து, தலையி்ல் பற்று போடலாம்.

முருங்கை இலையின் கொழுந்தைப் பறித்து, அதில் சிறிது தாய்ப்பால் விட்டு பற்றுப் போட்டால் தலைசுற்றல் நிற்கும்

இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்தால் தலைவலி குறையும்.

கடுகைத் தூள் செய்து, அதே சமஅளவு அரிசிமாவையும் எடுத்துவெந்நீரில் களி போல கிளறி, அதை நெற்றியில் பற்று போட்டாலும் தலைவலி குறையும்.

அதேபோல், சிறிதளவு மிளகை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு அரைத்தும் பற்று போடலாம்.

ஒரு டம்ளர் பாலை எடுத்து, அதனுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுபடுத்தி, வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடித்துவர வேண்டும்.

டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, குடித்து வந்தால் தலைவலி கட்டுப்படும்.

கிராம்பை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, நெற்றியில் பூசி வந்தால் தலைவலி கட்டுக்குள் வரும்.