இல்லறம் சிறக்க வேண்டும், உறவு மேம்பட வேண்டும் என்றால் வெறும் கணவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது. நல்ல நண்பனாக, தோழியாக இருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் துணைக்கு ஓர் நல்ல தோழனாக, தோழியாக இருக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
டிவி, பேஸ்புக், சினிமா போன்றவற்றை தவிர்த்து. உங்கள் இருவருக்குள் நேரத்தை செலவழியுங்கள். அதிகம் ஒருவருடன் ஒருவர் பேசுங்கள். ஒருவர் மீது ஒருவர் அதிக கவனம் செலுத்துங்கள்.
ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்க வேண்டும். அவர் சொல்லாமல் இருந்தாலும், அவர் என்ன சொல்ல வருகிறார், என்ன உணர்கிறார் என்பதை நீங்களாக உணர கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் அதிகமாக பேச வேண்டும்.
அவருக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். அவருக்கு பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். முக்கியமாக அவரது முகத்தில் புன்னகை தவழ என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்ய மறக்க வேண்டாம்.
ஒன்றாக கோவிலுக்கு, மார்கெட், வேறு இடங்களுக்கு சென்று வாருங்கள். இவை, உங்களுக்குள் ஒர்விதமான இணக்கத்தை அதிகரிக்கும். இந்த இணக்கம் தான் அன்பை உறவில் பெருக்கெடுத்து ஓட உந்துதலாக இருக்கும்.
ஒன்றாக இருக்கும் போது இணைந்தே இருங்கள். கைகோர்த்து நடக்க மறக்க வேண்டாம். இரவில் ஒன்றாக உறங்க செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு வேலைப்பளுவாக இருப்பினும், உங்கள் துணையை மறந்துவிட வேண்டாம்.