திருமண வாழ்வில் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ளல் வேண்டும். சரியாக புரிந்து கொண்டால் மட்டும் வாழ்வில் மகிழ்ச்சி வந்துவிடுமா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி எங்களுக்கு புரிகிறது; உங்கள் அலுவலக பணிகளை மட்டுமே செய்து கொண்டு, தம்பதியர் ஒருவருக்கொருவர் தேவையான நேரத்தை ஒன்றாய் செலவிடாமல் இருந்தால், அது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்காது.
திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிறைய தம்பதியர் கீழ்கண்ட இரகசியங்களை அறிதல் அவசியம்; அப்படிப்பட்ட இரகசியங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்!
1. நேரம்!
தம்பதியர் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி, பேசி, சிரித்து, வெளியில் சுற்றி மகிழ வேண்டும்; இது உங்களிடையே உள்ள காதலை அதிகரித்து, உங்கள் வாழ்வை வசந்தமாக்க உதவும்.
2. மதித்தல்!
என்னதான் நீங்கள் கணவன்-மனைவி என்றாலும், ஒருவருடைய கருத்தை மற்றவர் மதிக்க வேண்டும்; வெளியாட்கள் முன் உங்களை நீங்கள் விட்டுக்கொடுத்தல் கூடாது. ஒருவர் உயர மற்றவர் ஏணியாக வேண்டும்; இது உங்களை வாழ்க்கைப் பாதையில் உயர்த்துவதோடு, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைக்கும்!
3. உறவு!
அடிக்கடி காதல், அதாவது ரொமான்ஸ் செய்யுங்கள்; என்ன வயதானாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலை மறவாமல் வெளிப்படுத்துங்கள். அடிக்கடி வெளியில் சுற்றுலா, டின்னர், லஞ்ச் என்று போய் வந்து மகிழ்ச்சியாக பேசி, சிரியுங்கள்! இது உங்களை எப்போதும் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்!