பாலுறவு அல்லது செக்ஸ் என்பது மனிதன் உணர்ச்சியால் தூண்டப்பட்டு, அன்றாட அல்லது அவ்வப்போது தேவைப்படும் உணர்வுகளில் ஒன்று என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
சமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள்.
`ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற மனோநிலை மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. குடும்பத்தை விரிவாக்கத் தொடங்கிய மனிதர்கள், தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொண்டு பாலுறவுப் புணர்ச்சியிலும் அதனைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.
குறிப்பிட்ட வயதில் பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்வதற்காக திருமணம் என்ற சடங்கு ஏற்படுத்தப்பட்டது.
முன்பெல்லாம் தங்கள் ஊரிலேயே சுற்றியிருக்கும் உறவினர்களை நேரில் அழைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்தி வைத்தனர் பெரியவர்கள்.
பின்னாளில் உறவினர்கள் வேறுவேறு ஊர்களில் இருப்பதால் அவர்களை அழைப்பதற்காக உருவான அழைப்பிதழ்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமாகி விட்டது. திருமணம் என்றாலே அழைப்பிதழ் கட்டாயம் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறவினர்களுக்கும் அனுப்பப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது.
பாலுறவுப் புணர்ச்சியை முறையாகக் கையாள்வதற்காகவே நாகரீக சமுதாயம் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையும் நிர்ணயித்து தற்போது அது நடைமுறையில் இருந்து வருகிறது.
விவரம் தெரியாத வயதில், குழந்தைப் பருவ திருமணங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில மாநிலங்களில், ஏதாவது ஒன்றிரண்டு குழந்தை திருமண சம்பவங்கள் பற்றி அறிகிறோம். காலப்போக்கில் அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு விடும்.அந்தரங்க இன்பம் :