பெண்கள் அழகு:ஒவ்வொரு வடிவ முகத்துக்கும் ஒவ்வொரு முடி வடிவமைப்புப் பொருத்தமாக இருக்கும். அதைக் கவனமாகத் தேர்வுசெய்வதில்தான் இருக்கிறது நமக்கான ஃபேஷன். எந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என்று பார்க்கலாம்.
நீள் வடிவ முகம்:
நீள் வடிவ முகம் உடையவர்களுக்கு, தாடைப் பகுதி நீளமாக இருக்கும். இவர்கள், முடியை லூஸ்ஹேர் விடாமல், நடு வகிடு எடுத்து, முடியை இழுத்துப் பின்னலிட்டால், முகம் எடுப்பாகத் தெரியும். நீள் வடிவ முகம் உடையவர்கள், முடியை நெற்றியில் விழுவது போன்ற ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம். இது, உங்கள் முகத்தை மெச்சூர்டாகக் காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முக்கோண வடிவ முகம்:
நெற்றி பெரியதாகவும் தாடை சிறியதாகவும் உள்ளது எனில், உங்களுக்கு முக்கோண வடிவ முகம். இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ’ கட் அல்லது `வி’ கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், டிரண்ட்லி லுக் பெறலாம்.
நீள் வட்ட வடிவம்:
நீள் வட்ட வடிவ முகம் உடையவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எல்லா வகையான ஹேர் கட்டையும் முயன்று பார்க்கலாம். எந்த விதமான முடி அமைப்பிலும் நீள் வடிவ முகம் அழகாக இருக்கும்.
சதுர முகம்:
நெற்றி, தாடை, கன்னங்கள் எல்லாமே சமமாக இருந்தால், உங்கள் முகம் சதுரவடிவ அமைப்பைக் கொண்டது. இவர்களுக்குத் தோள்பட்டை வரை முடியை வைத்துக்கொள்ளும் `யூ’ கட் பொருத்தமாக இருக்கும். அல்லது ஸ்கோயர் கட் முறையை முயன்று பார்க்கலாம்.
வட்ட முகம்:
முன் நெற்றியையும் கன்னங்களையும் இணைக்கும் விதமாகக் காதுகளுக்குப் பின்னால் முடிவருவது போன்ற லேயர் கட் பொருத்தமாக இருக்கும். லேயர் கட்டில் 90 டிகிரி லேயர் கட், 1 டிகிரி லேயர் கட், க்ராஜூவேடட் லேயர் கட், யூனிஃபார்ம் லேயர் கட் என நிறைய வகை உள்ளன. 90 டிகிரி லேயர் கட் என்பது, நிறைய லேயர்களாக முடியை வெட்டிக்கொள்வது. முடி அதிகம் உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். 1 டிகிரி லேயர் கட் என்பது, லேயர்கள் குறைவாக உள்ளது. முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். க்ராஜூவேடட் லேயர் கட் என்பது, சில இடங்களில் லேயர்களாகவும், சில இடங்களில் நார்மலாகவும் இருக்கும் .யூனிஃபார்ம் லேயர் கட் என்பது, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான லேயர்களாக இருக்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பவர்கள் இதனை யூனிஃபார்ம் கட் தேர்வுசெய்யலாம்.