Home சூடான செய்திகள் வெறும் செக்ஸ், வேறெதுவும் இல்லை, இப்படியும் ஒரு கூட்டம்!

வெறும் செக்ஸ், வேறெதுவும் இல்லை, இப்படியும் ஒரு கூட்டம்!

30

இப்படியும் ஒரு கூட்டம் நாட்டில் உலா வருகிறதாம்… அதாவது வெறும் செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்வதற்காகவே நட்போடு பழகுவது, மற்றபடி வேறு எந்த எதிர்பார்ப்பும்
இவர்களுக்குள் இருக்காதாம்.

இப்படிப்பட்ட உறவுக் கூட்டம் பெருநகரங்களில் பெருக ஆரம்பித்துள்ளதாம். இவர்கள் வெறுமனே செக்ஸுக்காக மட்டுமே சந்தித்துக் கொள்வார்கள், சங்கமித்துக் கொள்வார்கள். மற்றபடி காதலிப்பது, திருமணம் செய்து கொள்வது போன்றவற்றுக்கு வேலை கிடையாது. வேறு எந்த கமிட்மென்ட்டும் கிடையாதாம்.

ஆனால் இதுபோன்ற உறவுகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் உளவியாளர்கள். காரணம், ஒரு சின்னத் தவறு நடந்தாலும் அந்த பார்ட்னர்ஷிப் காலத்திற்கும் உடைந்து போய் விடும் வாய்ப்புள்ளதாம்.

சரி இத்தகைய உறவை எப்படி ‘பேணிப் பாதுகாப்பது’…அதுக்கும் டிப்ஸ் சொல்றாங்க, கேட்டுக்குங்க…

ரகசியம் பரம ரகசியம் – இப்படிப்பட்ட உறவுகளை எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்வது அவசியமாம். இருவருக்கும் இடையே உள்ள ஒரே எதிர்பார்ப்பு செக்ஸ் மட்டுமே என்பதால் இதை வெளிப்படுத்தி, பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால் தேவையான நேரத்தில் மட்டுமே தொடர்பு கொள்வது நல்லதாம். இந்த விவகாரம் குறித்து நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனுமோ விவாதிப்பது சரியில்லையாம்.

முரட்டுத்தனம் கூடாது – இத்தகைய உறவில் முரட்டுத்தனத்துக்கும், மிரட்டல்கள், உருட்டல்களுக்கும் வேலை இல்லை. எதுவாக இருந்தாலும் மென்மையாகத்தான் அணுக வேண்டும், எதையும் பொலைட்டாக கேட்டுத்தான் பெற வேண்டும். மேலும் செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் ஆளே மாறிப் போய் பேசுவதும் கூடவே கூடாதாம்.

எப்பவும் ரெடியாக இருக்கனுமாம் – உங்களது பெண் துணை எப்போது கூப்பிட்டாலும் உடனே போவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டுமாம். இதுபோன்ற இறவுகளில் இருவருக்குமே ஒரே நேரத்தில் மூடு இருக்கும் என்று கூற முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. அதற்காக கூப்பிடுகிற நேரத்தில் பார்ட்னரைத் தேடிப் போகாமல் இருக்கவும் முடியாது, அப்படி போகாவிட்டால் பார்டனரே மாறிப் போய் விடலாம் இல்லையா…எனவே எப்போது அழைப்பு வந்தாலும் அதை மதிக்க வேண்டுமாம்.

இதைப் படித்தவுடன், என்ன கொடுமை சரவணான்னு கேட்கத் தோன்றுகிறது இல்லையா…!